நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழும்? - பதில் சொல்லுங்க ப்ரோ?
பதில் சொல்லுங்க ப்ரோ?
கோள்களின் எடையை எப்படி தீர்மானிக்கிறார்கள்?
அறுபது கிலோ தாஜ்மகால் என்று பெண்களை தோராயமாக வர்ணிப்பது போல அல்ல. கோள்களின் எடையை அதன் ஈர்ப்புவிசை எந்தளவு வீரியமாக உள்ளதோ அதை வைத்தே தீர்மானிக்கிறார்கள். புதிதாக கண்டுபிடிக்கும் கோள்களை அதன் குறுக்களவு, அதிலுள்ள கனிமங்களின் அளவு வைத்து எடை இவ்வளவு இருக்கும் கண்டறிந்து கூறுகிறார்கள்.
ஒரு கோள் எந்தளவு ஈர்ப்புவிசையைக் கொண்டு பிற கோள்களை ஈர்க்கிறது என்பதே இதில் முக்கியம். இதற்கு நியூட்டனின் ஈர்ப்புவிசை கொள்கைகள் பயன்படுகின்றன. ஒருகோளின் எடையை தனியாக கண்டுபிடிப்பதை விட அதற்கு ஒரு துணைக்கோள் இருந்தால் வேலை எளிதாகிவிடும். செயற்கைக் கோள் மூலம் அதன் ஈர்ப்புவிசை பற்றிய விவரங்களைப் பெற்று எடையைக் கணக்கிட முடியும். கோள்களில் புதன், வெள்ளிக்கு நிலவுகள் கிடையாது. இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள ஈர்ப்பு விசை என்பது மிக குறைவு. இனிவரும் காலங்களில் நாம் விண்கலங்களைக் கொண்டு நேரடியாகவே கள ஆய்வுகளுக்கு சென்றுவிடலாம். இதனால் தோராய அளவுகளை கணிக்க வேண்டிய அவசியம் குறைவு.
நட்சத்திரங்கள் எத்தனை ஆண்டுகள் வாழும்?
சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். இதன் ஆயுளை அதில் நடக்கும் அணுசக்தி விளைவுகளை வைத்துத்தான் கணக்கிடுகிறார்கள். அதில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் தீரும்வரை நட்சத்திரங்கள் ஒளிவிடும். பிறகு மெல்ல தேய்ந்து ஒளி மங்கி அழிந்துபோகும்.
சூரியனைப் பொறுத்தவரை ஐந்து பில்லியன் ஆண்டுகள் உயிர் வாழும் என்று கணக்கிட்டுள்ளனர். பெரும்பாலான நட்சத்திரங்கள் நீங்கள் மொட்டை மாடியில் நின்று பார்த்தாலே தெரியும். இவற்றில் சில மட்டும் தொலைநோக்கியில் பார்க்கும்படி இருக்கும். இவை தூசிகள், கதிர்வீச்சு காரணமாக சற்று தெளிவில்லாமல் இருக்கும். நட்சத்திரங்களில் நடக்கும் வேதிவினைகள் காரணமாக ஏற்படும் வெப்பம், ஈர்ப்புவிசை ஆகியவை அதன் ஆயுளை அதிகரிப்பதில் முக்கியமான பங்கை ஆற்றுகின்றன.
நன்றி
சயின்டிபிக் அமெரிக்கன்
பிக்ஸாபே
கருத்துகள்
கருத்துரையிடுக