உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல்வழிச்செய்திகள்!

 






உணர்வுகளைச் சொல்லும் குரல்வழிச்செய்தி! 


இன்று பெரும்பாலும் குறுஞ்செய்திகளை எழுதி அனுப்புவதை விடகுரல் வழியே செய்தி அனுப்புவதே புகழ்பெற்றுள்ளது. பொதுமுடக்கம் பலரையும் வெளியிடங்களில்  சந்திப்பதைத் தடுத்திருக்கிறது. இதன் காரணமாக குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்களில் கூட குரல்வழிச் செய்திகள் அதிகம் அனுப்பப்படுகின்றன.  2013ஆம் ஆண்டு  இந்த வசதி வா்ட்ஸ்அப்பில் நடைமுறைக்கு வந்தாலும், புகழ்பெற்றது பொதுமுடக்க காலகட்டத்தில்தான். 


இன்று போனில் வரும் அழைப்பே, மிகவும் அவசரம் என்றால் மட்டும்தான் என்பதாக மாறியிருக்கிறது. புதிய தலைமுறையினர் பெரும்பாலும் குரல்வழிச் செய்தியை உரையாட அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அப்படி என்ன சிறப்பு?  ஒருவர் தன்னுடைய குரலில் தான் நினைப்பதை நண்பரிடம் பகிர்ந்துகொள்ளலாம். ஒருவர் வேண்டும்போது இந்த செய்தியைக் கேட்டுக்கொள்ளலாம். உடனடியாக பதில் சொல்ல வேண்டியதில்லை. மேலும், ஒருவர் தனது குரல் வழியாக பிறரிடம் பேசும்போது நேரடியாக பேசுவது போன்ற நெருக்கம் உருவாகிறது. 


எதையும் படிக்க அவசியமில்லாமல் காதில் கேட்டுக்கொண்டு செய்தியை அறிந்துகொள்ளலாம். பதில் அளிக்க விரும்பினால் கூட அந்த நேரத்து சூழலின் தன்மைப்படி செய்தி அனுப்பலாம்.  குறுஞ்செய்தியில் ஒருவர் விழாவுக்கு அல்லது நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்று கூறும்போது, பிறர் அவரது சூழ்நிலை பற்றி எளிதாக உணர முடியாது. ஆனால் ஒருவரின் குரலைப் பொறுத்தவரை அவரின் மனதை எளிதாக அறியமுடிகிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.  பரபரப்பான  பணிகளுக்கு இடையில் இதுபோல குரல் வழி செய்திகளை அனுப்புவது எதிரிலுள்ளவர்களுக்கும் நிலைமையை தெளிவாகப் புரியவைக்கும். 


அதேசமயம் குரல்வழி செய்திகளை சிலர், தங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றும்போது அனுப்புவது, நான்கு நிமிடங்களுக்கு நீளும்படி அனுப்புவது என்பது நண்பர்களாக இருந்தாலும் எரிச்சலூட்டும் ஒன்றாக மாறியுள்ளது. தனிமையில் இருப்பவர்களுக்கு குரல்வழிச்செய்தி என்பது உதவியாக இருக்கலாம் என்றாலு்ம் அதில் கட்டுப்பாடுகள் இல்லாதபோது பிறரையும் பொறுமையிழக்க வைக்கும் அபாயம் உள்ளது. ஒருவர் தனது மனதில் தோன்றும் எண்ணங்களை மட்டும் முன்னிலைப்படுத்துவதால் பிறர் இதனை ஒருவரது சுயநலமான வெளிப்பாடு என்று கருதவு்ம் வாய்ப்புள்ளது. 


பொதுமுடக்க காலத்தில் ஒருவர் எழுதும் செய்திகள் இருவரிடையே நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் காலத்திற்கேற்ப மாற்றம் என்ற வகையில் குரல்வழிச்செய்தி என்பது இன்னும் உயிர்ப்பானது. நெருக்கடியான காலத்தில் பெற்றோராக மாறியவர்களுக்கு குரல்வழிச்செய்திகள் ஊக்கமூட்டுபவையாக அமைந்துள்ளது. வாழ்த்துகளோ, உதவிகளோ ஒருவரது குரலில் பதிவு செய்யப்பட்டு ஒலிக்கப்படும்போது,  உலகத்தோடு தொடர்புகொண்டிருப்பதாக அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 


தகவல்தொடர்பு கொள்வதில் புரட்சி நடந்துள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. எழுத்துவடிவம் என்பது அனைத்து சூழல்களிலும் எடுபடாது என்பதோடு குரல்வழிச்செய்தி எளிமையாக இருப்பதால் பலரும் அதனைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்த முறையில் சவால்கள் இருந்தாலும் மக்களின் பயன்பாட்டி்ற்கு எளிமையாக இருப்பதால், பெரும் வரவேற்பு பெற்றுவருகிறு. 


தகவல்

 metro


https://metro.co.uk/2021/05/13/the-psychology-of-voice-notes-why-we-all-love-audio-messaging-14567948/

கருத்துகள்