சீரியல் கொலைகாரர்கள் புத்தகம் எழுதுவது இதற்காகத்தான்!

 







குற்றவுணர்ச்சி 

சீரியல் கொலைகார ர்கள் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது குற்றவுணர்ச்சி பற்றி கேட்டால் என்ன சொல்வது? குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் அவர்களின் மூளையில் தேய்ந்துபோயிருக்கும். காவல்துறையில் பிடிபட்டு தூக்கு தண்டனை கொடுக்கும்போது மட்டுமே இனிமேல் கொலைகள் செய்ய முடியாது என கர்த்தரே, பாலாஜி, அல்லா என அலறுவார்கள். ஆனால் சாட்சிகள் கான்க்ரீட்டாக இருந்தால் என்ன செய்வது? உறுதியாக சாவுதான். 

மன்னிப்பு கூட கேட்கமாட்டார்களா என்றால் அதுவும் கூட கிடையாதுதான். அவர்கள் மன்னிப்பு கேட்பதே இன்னும் கொடூரமாக இருக்கும். உங்கள் மகள் இறக்கும்போது வலியாலும், பயத்தாலும் கத்தியது எனக்கு வேடிக்கையாக இருந்தது என சொல்லி மன்னிப்பு கேட்பார்கள். இதனை நீங்கள் மன்னிப்பாக ஏற்பீர்களா?

குற்றங்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விடுவார்கள். அந்தளவில் சிறைக்கு சென்றாலும் கூட நான்தான் அதனை செய்தேன் என்று ஏற்கமாட்டார்கள். அதனை கடவுள் வந்து கட்டளையாக செய்யச் சொன்னார் என புருடா விட்டு எரிச்சலை கிளப்புவார்கள். இதெல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பேசுவதுதான். 

புத்தக எழுத்தாளர்

குற்றவாளிகள் புத்தகம் எழுதி என்ன சாகித்திய அகாதெமி அல்லது புக்கர் பரிசா வெல்லப்போகிறார்கள். எல்லாம் புகழுக்கும், பெருமைக்கும்தான். 

நாட்டை உருவாக்குபவர்கள் புத்தகம் எழுதினால் படிக்க ஆட்கள் இருப்பது போலவே, நாட்டை மெல்ல கரையானாக அரிக்கும் ஆட்களும் கூட நூல்களை எழுதி காகித த்தையும், படிக்கும் மனதையும் கெடுக்கிறார்கள். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை நூல்களை எழுதுவது புகழ்பெறவும், தண்டனையிலிருந்து தப்பிக்கவும், மக்களிடையே செல்வாக்கு பெறவும்தான். மேற்கு நாடுகளில் சீரியல் கொலைகார ர்கள் டிவிகளில் நிறைய பேட்டிகளை தட்டி விட்டிருக்கிறார்கள். விகடனின் சுதர்சன் காந்தி போல அர்த்தமே இல்லாத கேள்விகளைக் கேட்டு இவர்களை பில்டப் கொடுத்து பிரபலமாக்குபவர்கள் அங்கு நிறையப் பேர் உண்டு. 

தான் இறந்தாலும் தனது கற்பனைகள், சித்திரவதை முறைகள், சிந்தனைகள், கருத்துகள் வாழ வேண்டுமென்று பலரும் நினைப்பார்கள். அதை செயல்படுத்த சிறந்த வழி நூல்களை எழுதுவதுதான். சீரியல் கொலைகார ர்களும் இந்த வழியைத்தான் கடைபிடிக்கிறார்கள். 

pat brown







கருத்துகள்