விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்!
விவசாயிகள் போராட்டமும், உள்குத்து அரசியலும்
கடந்த சில மாதங்களாக பாஜக அரசு ஆளும் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் வேகம் பெற்றுள்ளது. இதனை முடக்க அந்த மாநில அரசு இணையத்தை துண்டித்தது. தங்களது உரிமைகளுக்காக போராடிய மக்கள் மீது, தேச துரோக வழக்கு போடப்பட்டது. தடியடி நடத்தி விவசாயிகளை காவல்துறையினர் தாக்கினர். ஆனாலும் கூட விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இதெல்லாம் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசின் சதி என ஊடகங்களில் பேட்டி தட்டி விட்டுக்கொண்டிருக்கின்றனர். என்னதான் பிரச்னை?
ஹரியானா அரசு, ஜாட் அல்லாதவர்களின் வாக்குகளை கணக்கு செய்து போராட்டத்தை முக்க நினைக்கிறது. ஒருவகையில் இப்படி போராட்டத்தை முடக்குவதும் கூட பிரித்து ஆளும் தந்திரம்தான். பின்னாளில் இவர்கள் ஜாட் இனத்தவர், ஜாட் அல்லாதவர் என வாக்குவங்கி பிரியும் என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் பிரமோத் குமார். மத்திய அரசும் தன் பங்குக்கு விவசாயிகள் போராட்டத்தை தீவிரவாத த்துடன் இணைத்து பார்த்து பேசி வருகிறது. ராம் ராம் என்று கூறுபவர்களை எப்படி நீங்கள் காலிஸ்தான் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் என்று கூறுவீர்கள் என்கிறார் பஞ்சாப் பல்கலையின் அரசியல் அறிவியல் துறையைச் சேர்ந்த அசுதோஷ் குமார்.
கப் பஞ்சாயத்து மனிதர்கள்தான் முதலில் விவசாயிகள் ஆபத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். மாநில அரசு, விவசாயிகளின் நிலத்தை பெரு நிறுவனங்களிடம் கொடுக்கிறது. இதனால் கிடைக்கும் பயன்களை வைத்து விவசாயிகள் தங்களின் பிள்ளைகளுக்கு மணம் செய்விக்க முடியாது என கப் பஞ்சாயத்தினர் பேசியுள்ளனர். ஒருவகையில் இது ஜாதி அடையாளம் என்றாலும், தலைநகரை ஒட்டியுள்ள பகுதியில் நிலங்களை அதிகம் கையகப்படுத்தி வருவது விவசாயிகளின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
விவசாயிகளின் போராட்டம் நவம்பர் 2020ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கான முதல் அறிகுறி பஞ்சாப்பில் தொடங்கியது. விவசாயிகள் அனைவரும் ஒன்றாக திரண்டு தலைநகர் டில்லிக்கு வந்தனர். அதன் எல்லைப்பகுதியில் தங்கினர். நீரைப் பீய்ச்சி அடித்து முகாம்களை கலைத்து போட்டாலும் கூட கவலைப்படாமல் போராடினர். இவர்களுக்கு தேவையான உதவிகளை ஹரியானா மாநில விவசாயிகள் செய்துகொடுத்தனர். இது நாம் அனைவரும் விவசாயிகள் என்ற எண்ணத்தால் உருவான இணக்கம். வரலாற்று ரீதியாகவே பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் நீர் தொடர்பான முரண்பாடு உள்ளது.
இருமாநிலங்களும் போராட்டத்தில் ஈடுபட்டதில் சமூக வலைத்தளங்கள் பெரியளவில் உதவின. போராட்டம், நடைபெறும் இடம், பேச்சு வார்த்தை என அனைத்தும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டன. இப்போராட்டங்களைப் பற்றி பேசும் சிலர் சட்டங்களை விவசாயிகள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் போராட்டங்களை நடத்துகின்றனர் என்று கூறுகின்றனர். போராட்டங்களை வழிநடத்தும் தலைவர்களான சர் சோட்டு ராம், சௌதாரி தேவி லால் ஆகியோர் தொடர்ச்சியாக கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் பேசி வருகிறார்கள். என்ன செய்யவேண்டுமென விவாதிக்கிறார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மன்ராஜ்கிரேவால் சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக