அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலின்போது பிரபலமாக இருந்த மனிதர்கள்!

 








செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பங்கேற்று முக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்பு இது.  மேற்படி அமெரிக்க தாக்குதல் நடந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பிறகு அமெரிக்க மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து தாக்கி ஜனநாயகத்தை மலர வைக்க முயன்றாக கூறியது. பெரும்பாலும் அனைத்து முயற்சிகளிலும் ஆயுதங்களை விற்பனை செய்தது தவிர வேறு எந்த நன்மைகளும் இடைக்கவில்லை. 

ஜார் ஜ் டபிள்யூ புஷ்

அமெரிக்காவில் வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்தபோது, இரண்டாம் வகுப்பு மாணவர்ளுக்கு ஆடுபற்றிய கதையை வாசித்துக்கொண்டிருந்தார். புளோரிடாவில் அவர் மாணவர்களுடன் இருந்தபோது தாக்குதல் செய்திகள் கூறப்பட்டன. அப்போது அவரின் முகம் வெளிறிப்போய் இருந்த புகைப்படம், இணையத்தில் வைரலானது. அப்போது தொடங்கிய முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பார்க்கும் பார்வை இன்றுவரை மாறவில்லை. ஆப்கானிஸ்தான் விவகாரத்தை இன்றுவரையும் பின்தொடர்வதாக கூறிவருகிறார். 

காண்டலிசா ரைஸ் 

இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஹூவர் அமைப்பில் இயக்குநராக உள்ளார். புஷ் ஆட்சியில் இருந்தபோது என்எஸ்ஏ அமைப்பில் ரைஸ் வேலை செய்தார். 2001ஆம் ஆண்டு சிஐஏ இயக்குநர் ஜார்ஜ் டெனட்  உடன் அமெரிக்கா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதா என விவாதங்களை செய்தார். என்னதான் சிறப்பாக வேலை செய்தாலும் கூட வர்த்தக மைய தாக்குதல் அரசின் உளவுத்துறை மீதான பெரிய களங்கம் என்றே சொல்லவேண்டும். 

ஒசாமா பின்லேடன்

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர். ஆப்கானிஸ்தானின் குகைகளில் இருந்தபடியே அமெரிக்காவில் எப்படி தாக்குதல் நடத்த வேண்டுமென தீர்மானித்து விட்டார். அதை சாதித்தும் காட்டினார்.  2011ஆம் ஆண்டு மே 2 அன்று, ஆபரேஷன் நெப்டியூன் என்ற பெயரில் அமெரிக்காவின் சிறப்புபடை பாகிஸ்தானில் பின்லேடனை சுட்டுக்கொன்றது. பாகிஸ்தானுக்கு தீவிரவாத த்தை ஒழிக்கவென ஏராளமான பணத்தை அமெரிக்கா செலவழித்து வந்தது. பாகிஸ்தான் தனது நாட்டில் பின்லேடன் தங்கியிருப்பதாக அமெரிக்காவிடம் கூறாத நிலையில், அமெரிக்க அவரை கண்டுபிடித்து கொன்றது.

ரூடி கியுலியானி

தாக்குதல் நடந்தபோது நியூயார்க் நகர மேயராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர். இதனால் மீடியா பிரபலமான ஓப்ரா வின்ப்ரேவினால் அமெரிக்காவின் மேயர் என்று அழைக்கப்பட்டார். டைம் இதழ், அந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து கௌரவம் சேர்த்தது. பின்னாளில் டிரம்பின் ஆதரவாளராக மாறினார். வழக்குரைஞரின் உரிமம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஹமித் கர்சாய்

அமெரிக்கா, 2014இல் ஆப்கானிஸ்தானுக்கு வந்தபோது தாலிபனின் தலைவராக இருந்தவர் ஹமித் கர்சாய். பிறகு, அமெரிக்கா தாலிபன், அல்கொய்தா ஆகிய இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென முயற்சி செய்தார். பல்வேறு கொலை முயற்சிகளில் தப்பித்தவர், ஆப்கனில் அமைந்துள்ள ஆட்சியில் அதிகாரத்தைப் பெற முயன்று வருகிறார். 

டிக் செனெய்

புஷ் காலத்தில் பிரபலமாக இருந்து மெல்ல தேய்ந்து காணாமல் போன அரசியல் ஆளுமை. வர்த்தக மைய தாக்குதல் நடந்தபோது, புஷ்ஷை பாதுகாக்கும் முயற்சிகளை முதலில் எடுத்தவர் . அந்த நேரத்தில் ஊடகத்தில் அதிகம் பேசப்பட்டவர் டிக் செனெய்தான். 2001 முதல் 2009 வரை பதவியில் இருந்தார். ஐந்துமுறை மாரடைப்பு வந்தாலும் பிழைத்து வாழ்கிறார் என்பது ஆச்சரியமான சங்கதி. 

கோலின் போவெல்

2001ஆம் ஆண்டு அரசு செயலாளராக இருந்தார். தாக்குதல் நடந்தபோது லிமா என்ற  இடத்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்துகொண்டிருந்தார். ஐ.நாவில் இராக்கின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடாது என வலியுறுத்திய ஆளுமை. இவரின் கருத்துகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 6 அன்று வாஷிங்டன் மீது தாக்குதல் நடைபெற்றது. இதனால், குடியரசு கட்சியிலிருந்து விலகிவிட்டார்.

ஹெச்டி   






 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்