டீன் ஏஜ் இளைஞர்களுக்கான நூல்கள் 2015-2017

 







2015

சிக்ஸ் ஆப் கிரௌஸ் 

லெய் பர்டுகோ

புனைவுக்கதையில் நாயகர்களுக்கும் எதிர்மறை பாத்திரங்களுக்கும் இடையிலுள்ள குண வேறுபாடுகளை லெய் நூலில் விளக்கியுள்ளார். 


2016

சால்ட் டு தி சீ

ரூடா செப்டிஸ்

கிழக்கு ப்ருஸ்யாவில் நடைபெறுகிற கதை. கிழக்கு ஜெர்மனிக்கு படகு வழியாக மூன்று பாத்திரங்கள் எப்படி செல்கிறார்கள், இவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள்தான் கதை. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பிறகு நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது. 

2016

தி சன் ஈஸ் ஆல்ஸோ எ ஸ்டார்

நிக்கோலா யூன்

நியூயார்க்கில் நடைபெறும் காதல் கதை. எழுத்தாளர் டேவிட் யூன் மற்றும் நிக்கோலாவின் கணவர் ஆகியோருடனான காதல் சம்பவங்களை இந்த நாவல் தழுவியுள்ளது. 

2016

வீ ஆர் தி ஆன்ட்ஸ்

சாவுன் டேவிட் ஹட்சின்சன்

பள்ளியில் கடுமையாக கேலி செய்யப்படும் ஹென்றி, உலகை காப்பாற்ற முயலும் கதை. உலகை ஹென்றி காப்பாற்றுவானா என்பதுதான் முக்கியமான அம்சம். 

2016

வென் தி மூன் வாஸ் அவர்ஸ் 

அன்னா மேரி மெக்லெமோர்

இரண்டு இளம் வயதினர் தங்களுக்குள் கொள்ளும் காதல் உறவுதான் கதை. உலகையே மறந்து இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள்தான் முக்கியமான அம்சம். 


2016

சைதி

நீல் சுஸ்டெர்மன்

சித்ரா, ரோவன் என்ற இருவரும் கொலைகளை செய்வதற்காக கடுமையாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இருவரில் ஒருவர்தான் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படப்போகிறார். இந்த நிலையில் ஒருவரை மற்றொருவர் கொல்ல வேண்டும். மேற்சொன்ன இருவருக்குமே பிறர் மீது சொல்ல முடியாத ஆர்வம் இருக்கிறது. இதற்கு மேல் கதையை சொல்லவும் வேண்டுமா? 

2017

டியர் மார்ட்டின் 

நிக்  ஸ்டோன்

ஜஸ்டிஸ் மெக் அலிஸ்டர் என்ற பள்ளி மாணவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இனவெறி காரணமாக நடைபெறும் பாகுபாடுகள் எப்படி ஜஸ்டிஸை பாதிக்கிறது என்பதை விவரித்துள்ளனர். ஜஸ்டிஸ் தனது அனுபவங்களை மார்ட்டின் லூதர் கிங்கிற்கு கடிதமாக எழுதுகிறார். 

 2017

தி ஹேட் யூ கிவ்

ஆஞ்சி தாமஸ்

இனவெறிக்கு எதிரான நாவல். ஸ்டார் , கலீல் என்ற இருவரின் நட்பும், பள்ளி தொடர்பான சம்பவங்கள் ஈர்க்கின்றன. ஸ்டாருக்கு கிடைக்கும் கல்வி உதவித்தொகை அவரை கருப்பின குடியிருப்பிலிருந்து வேறிடத்திற்கு செல்ல உதவுகிறது. அப்போது வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் கலீலை சுட்டுவிடுகிறார். இதற்காக ஸ்டார் எப்படி நியாயம் வேண்டி போராடுகிறார் என்பதுதான் கதை. 

2017

ஐயம் நாட் யுவர் பர்ஃபெக்ட் மெக்சிகன் டாட்டர்

எரிகா எல் சான்செஸ்

ஜூலியா மற்றும் அவளது மூத்த அக்காவின் மரணம்தான் கதையை நடத்திச்செல்கிறது. மெக்சிகோவைச் சேர்ந்த ஜூலியா, அக்கா இறந்தபிறகு  தனது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார். உளவியல் பிரச்னைகளைப் பற்றி பேசும் நாவல் இது. 


2017

லாங் வே டவுன்

ஜேசன் ரினால்ட்ஸ் 

பதினைந்து வயது சிறுவன் தனது சகோதரனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறான். இந்த நிகழ்ச்சியைப் பின்தொடர்ந்து வரும் சம்பவங்கள்தான் கதை. வன்முறையைப் பற்றிப் பேசும் எழுத்தாளர் அதனை உணர்ச்சிகரமான நாவலாக மாற்றியுள்ளார். 

2017

தி மாரோ தீவ்ஸ்

செரி டிமாலைன்

ஒரு நாட்டில் உள்ள தொன்மையான மக்களை கடத்தி அவர்களின் எலும்பு மஜ்ஜைகளை அரசு திருடுகிறது. அரசின் பிடியில் இருந்தும் தப்பும் 16 வயது சிறுவனின் அனுபவங்கள்தான் கதை. 

2017

வீ ஆர் ஓகே

நினா லாகூர்

மரின் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தால் பாதிக்கப்படுகிறாள். இதனால் அதிலிருந்து தப்பிக்க சான்பிரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் நகருக்கு வாழ வருகிறாள். நான்கு மாதங்களுக்கு பிறகு மரின் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவள் தனது நெருங்கிய தோழியை சந்திக்க காத்திருக்கிறாள். தனது வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை யாருக்கும் சொல்லுவதில்லை. அப்படி என்ன சம்பவம் அவளது வாழ்க்கையில் நடந்தது என்று தெரிய நூலை வாங்கி நீங்கள் படிக்க வேண்டும். 


Time magazine







கருத்துகள்