இறந்துபோன பிணங்கள் வெடிக்குமா?

 







பதில் சொல்லுங்க ப்ரோ!?


பிணங்கள் வெடிப்பது சாத்தியமா?

இறந்துபோனவரின் உடலில் ஏதாவது பேஸ்மேக்கர், அல்லது வேறு பொருட்கள் பொருத்தப்பட்டிருந்தால் அப்படி வெடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி உடலை எரிக்கும்போது நீர்ச்சத்து குறைந்து தசைகள் இறுக்கமாகின்றன. அதனால் எழுந்து உட்கார வாய்ப்புகள் அதிகம். பிணத்தை தகனம் செய்பவர்கள் ராஸ்கோல் என தடியாலேயே நெஞ்சில் ஒரு போடு போட்டு அடக்குவார்கள். பிணம் படுத்துவிடும். மற்றபடி உடலிலுள்ள வாயுக்கள் காரணமாக உடல் வெடிக்கும் என்பது அரிதாகவே நடக்கம். அந்தளவு அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் கிடையாது. 

உடல் அழுகிப்போகும் நிலையை பதப்படுத்தும் செயல் மட்டுப்படுத்துகிறது. இதனால் உடலிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்துபோன செல்களை தின்னும் செயல் தடைபடுகிறது. தசைகள் இறுக்கமடைந்தாலும் உடல் முழுக்க அழுகிப்போவதை தள்ளிப்போடலாம். அழுகும் உடலிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா ஆகிய வாயுக்கள் வெளியே வருகின்றன. 

ஐஸால் படகு செய்து பயணிக்க முடியுமா?

கேட்க நன்றாக இருந்தாலும் சாத்தியம் குறைவு. கடல் வெப்பநிலை அதிகரித்தால் ஐஸ் படகில் அல்லது கப்பலில் பயணிக்கும் பயணிகளின் கதி என்ன? இங்கிலாந்து அரசு இந்த ஐடியாவை எடுத்துக்கொண்டு ஹபுக்குகா என்ற திட்டத்தை உருவாக்கியது. ஐசுடன் மரத்தின் பகுதிப்பொருட்களை கொண்டு கப்பலை கட்டியது. ஆனால் இதனை அதே நிலையில் வைத்திருக்க குளிர்சாதன வசதி போதவில்லை. ஸ்டீல், அலுமினியம் கலந்து ஐஸ் கப்பல்களை உருவாக்கி சோதித்தனர். இதற்கு விஞ்ஞானி ஜியோப்ரே பைக்ரே பெயரைச் சூட்டினர். இந்த மாதிரி அமைப்பு சாதாரண பனிக்கட்டிகளை விட வலுவாக இருந்தது. 




கருத்துகள்