இடுகைகள்

இலவசக் கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழங்குடிகளுக்கு இலவச கல்வி அளிக்கும் அச்சுதா சமந்தா!

படம்
  பழங்குடிகளுக்கு கல்வி தரும் அச்சுதா சமந்தா!  ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர், அச்சுதா சமந்தா. இவர்,  30 ஆயிரம் பழங்குடி மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார். தொடக்க கல்வி மட்டுமல்ல, அவர்கள் முதுகலைப் பட்டம் பெறுவது வரையிலான கல்விச்செலவுகளை ஏற்கிறது அச்சுதாவின், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் அமைப்பு.  கலிங்கா இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் , அச்சுதா சமந்தா. இவர், ஒடிஷாவின் கலாபரபன்கா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது, நான்காவது வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். அதற்குப் பிறகு குடும்ப பொறுப்பை ஏற்றார். வீட்டுக்கு அருகிலுள்ள  மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதித்தார்.  கிடைத்த வருமானம் மூலம் குடும்ப செலவுகளைச் சமாளித்தார்.  முதுகலைப் பட்டத்தை படித்து முடித்தவர், பழங்குடி மாணவர்களின் கல்விக்கு உதவ தீர்மானித்தார். 1993ஆம் ஆண்டு பழங்குடி மாணவர்களின் கல்விக்காக கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (KISS) என்ற அமைப்பை உருவாக்கினார்.  இந்த அமைப்பு, பழங்குடி மாணவர்களுக்கு  தங்குமிடம், உணவு,கல்வி ஆகியற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பள்ளி, கல்லூரி, பல்