இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கிள் துறைக்கு இந்தியாவில் எதிர்காலம் உண்டா?

படம்
சைக்கிள் சவாரி ! உலகளவில் சைக்கிள் விடுவதில் சீனாவுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்குத்தான் . சந்தை மதிப்பு 65 பில்லியன் . அதேவேளையில் சைக்கிள் வாங்க கூட வசதி இல்லாத 320 மில்லியன் இந்தியர்கள் தினசரி ஆறு கி . மீ தூரம் நடந்து வேலைக்கு செல்கின்றனர் . கிராமங்களில் சொந்தமாக சைக்கிள் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 46 சதவிகிதம் . இந்தியாவில் முன்னணி சைக்கிள் நிறுவனமான ஹீரோ , 1,999 ரூபாய் விலையில் புதிய சைக்கிளை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தவிருக்கிறது . " இந்தியாவில் பதினைந்து மில்லியன் சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன . உள்நாடு மற்றும் வெளிநாடு மார்க்கெட்டும் சுணங்கிவருவது மீள்வது கடினம் " என்கிறார் ஹீரோ சைக்கிள் நிறுவனரான பங்கஜ் முஞ்சால் . தற்போது 3 ஆயிரம் விலை கொண்ட சைக்கிளுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதம் விதிக்கப்படுவதை மார்க்கெட் சரிவுக்கு காரணமாக சுட்டும் வல்லுநர்கள் , காலணிகளுக்கு வரி குறைவாக உள்ளதையும் குறிப்பிடுகின்றனர் . சைக்கிள் விற்பனை அளவு 65 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைந்துள்ளது . இந்தியாவில் ஆயிரம் வீடுகளுக்கு அறுபது சைக்கிள்களும் நெதர

டிஜிட்டல் தொழிலதிபர்!

படம்
நேபாளத்தின் டிஜிட்டல் தொழிலதிபர் ! பிஸ்வாஸ் தாகல் இளமையிலேயே தொழில்நுட்ப கிறுக்கு கொண்டவர் . வீட்டில் இன்டர்காம் அமைப்பை வழக்குரைஞர் தந்தைக்கு உருவாக்கி தந்ததே பிஸ்வாஸ்தான் .   பாக்கெட்மணியை மிச்சம் செய்துதான் எலக்ட்ரிக் பொருட்களை வாங்கி உள்ளார் . ரேடியோ மெக்கானிக்காக இருந்தவர் இன்று டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனத்தைதொடங்கி 40 மில்லியனுக்கு அதிபதி . தாகலின் நிறுவனத்தில் 6 லட்சம் பயனர்கள் இணைந்து விமான டிக்கெட் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றனர் . மத்தியவங்கியின் அனுமதியோடு இசேவா நிறுவனம் இன்று 77 மாவட்டத்தில் 3.5 மில்லியன் பரிமாற்றங்களை செய்து சந்தையில் முதலிடம் பெற்றுள்ளது . அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக அப்ளிகேஷன் 2002 ஆம் ஆண்டு மறுக்கப்பட , நேபாளத்தில் மென்பொருள் பொறியியல் படித்தவர் மைக்ரோசாஃப்டின் பொறியியலாளர் சான்றிதழ் பெற்று என்ஜிஓவில் வேலை செய்தார் . வெப் டொமைன்களை விற்கத்தொடங்கியவர் வெளிநாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவதிலுள்ள தடுமாற்றத்தை நீக்க 2007 ஆம் ஆண்டு இசேவா நிறுவனத்தை தொடங்கினார் . பின் மத்தியவங்கி வங்கிகள் டிஜிட்

வீக் எண்ட் பிட்ஸ்: கிரகாம்பெல் உச்சரித்த முதல் வார்த்தை

படம்
பிட்ஸ் ! சிலந்தி தன் வலையை தானே விழுங்கி பின்னர் வலையை ரீசைக்கிள் செய்து கட்டுகிறது . முதல் உலகப்போரில் (1914-18) ராணுவ வீரர்களுக்கு டூநட் வழங்கிய தன்னார்வலர்களை நினைவுகூறும்பொருட்டு தேசிய டூநட் தினம் கொண்டாடப்படுகிறது . 1878 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் தொலைபேசி சேவையைத் தொடங்கியபோது சொன்ன  முதல் வார்த்தை Ahoy. அமெரிக்காவின் பெயர் காரணத்திற்கு ஆதாரமாக கூறப்படும் Amerigo Vespucci என்பவர் , இத்தாலியைச் சேர்ந்த வியாபாரி . ஐம்பது வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி நூலை எழுத டாக்டர் சியூசிடம் எடிட்டர் பென்னட் செர்ஃப் சவால் விட , டாக்டர் சியூஸ் அதனை ஏற்று எழுதிய நூலின் பெயர் Green Eggs and Ham. 

செவ்விந்தியர்களை அழித்த ஆய்வாளர்!

படம்
செவ்விந்தியர்களை அழித்த ஆய்வாளர் ! 1838 ஆம் ஆண்டு க்யூபாவில் பிறந்த ஃபிளெச்சரின் தந்தை நியூயார்க்கில் வழக்குரைஞர் . உடல்நல பிரச்னைக்காக கரீபியன் தீவுகளுக்க சென்றனர் . தந்தை இறந்த ஓராண்டுக்குப்பின் ப்ரூக்ளினுக்கு தாயுடன் திரும்பிய ஃபிளெச்சர் பள்ளிப்படிப்பை முடித்து குழந்தைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லித்தரும் ஆசிரியையாக செயல்பட்டார் . 1870 ஆம் ஆண்டில் Sorosis என்ற பெண்கள் அமைப்பில் இணைந்தார் . தன்னுடைய நண்பர்கள் , அந்தஸ்தை பயன்படுத்தி செவ்விந்தியர்கள் குறித்த மானுடவியல் , தொல்லியல் ஆகிய துறைகளில் இறங்கினார் .   ஹார்வர்டைச்சேர்ந்த எஃப் . டபிள்யூ புட்னம் என்பவரிடம் அனுமதி பெற்று ஆய்வைத் தொடங்கினார் . அமெரிக்க அரசு ஒமஹா , சியாக்ஸ் பிற பழங்குடிகளிடம் நிலத்தை பறிக்க முயற்சித்துவந்தது . ஒமஹா கலாசார தகவல்களை பழங்குடித்தலைவரின் மகளான லா பிளெச்சே , அவரது கணவர் தாமஸ் ஹென்றி வழங்கினர் . பிளெச்சர் நினைத்தபடி அரசு நிலங்களை வழங்காமல் பழங்குடிகளின் நிலங்களை பறிக்க டேவிஸ் என்ற சட்டத்தை 1887 ஆம் ஆண்டு நிறைவேற்றியது . இதற்கு தூதராக செயல்பட்டதே ஃபிளெச்சர்தான் . தனது செயல் பற்றி அணுவளவு

நாயின் உடல்மொழி என்ன சொல்கிறது?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?-Mr. ரோனி முன்காலை தாழ்த்தி உடலை பின்னோக்கி இழுக்கும் நாயின் உடல்மொழியை எப்படி புரிந்துகொள்வது ? காட்டில் இருந்த நாயின் முன்னோர்களான ஓநாய்கள் இரையை கொன்று தின்னும் முன்பு மேற்சொன்ன உடல்மொழியை பின்பற்றும் . பின்னாளில் வீட்டு விலங்காக அதன் வம்சாவளியாக நாய்கள் வந்தபின் இந்த உடல்மொழிகள் மரபின் வழியாக அப்படியே வந்துவிட்டன . இன்னொரு சக நாயுடன் இணக்கமாக உரையாட இந்த உடல்மொழியை நாய்கள் கைக்கொண்டு மெல்ல பொய்க்கடி கடித்து உருண்டு புரண்டு விளையாடி மகிழும் . டென்ஷனிலுள்ள தன் எஜமானரை பந்துகளை வீசி எடுத்துவரவும் , கைகளை மெல்ல நக்கி விளையாட அழைப்பதும் இந்த வகையில்தான் . இதைப்படித்துவிட்டு நாயின் முன்பு பிஸ்கட்டை வீசுவதாக ஏமாற்றி அம்பியாய் கடிவாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல .  

கோப்ராபோஸ்ட்டின் துணிச்சலான முயற்சி!

படம்
முத்தாரம் Mini   ஸ்டிங் ஆபரேஷன்கள் எதற்காக ? பத்திரிகையாளர்களின் செய்தி என்பது தீர்க்கமான ஆதாரங்களிலும் உண்மையிலும் எழுந்துநிற்பவை . ஆனால் ஊடக நிறுவனங்கள் சில இதுபோன்ற திடுக்கிடும் செய்திகளை மறுக்கும்போது ஸ்டிங் ஆபரேஷன்கள் பிறக்கின்றன . 136 என்பது உலக பிரஸ் ப்ரீடம் பிரஸ் பட்டியலில் இந்தியாவின் இடத்தைக் குறிப்பது . தற்போது இந்தியா 138 ஆவது இடத்திற்கு வந்துவிட்டது . ஊடக நிறுவனங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ? அச்சு , காட்சி , இணைய ஊடகங்களை தோராயமாக தேர்ந்தெடுத்து எங்கள் செய்தியாளர் ஊடக உரிமையாளரை , விற்பனை மேலாளரை சந்திக்கிறார் . பொதுவாக ரிஷப்ஷனுக்கு போனில் தொடர்புகொண்டு பேசுவார்கள் . கோப்ரா போஸ்ட் செய்கிற இதுபோன்ற ஸ்டிங் முறைகள் ஊடகத்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தாதா ? ஊடகம் என்பது மக்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிற துறை . ஆனால் ஊடகங்களின் ஆசிரியர் பிரிவு என்பது லஞ்சம் பெறுகிறதாக மாறினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து அல்லவா ? நாளிதழ்கள் அரசிடம் மானிய உதவிகள் பெறுவது பொதுமக்களின் சேவைக்காக மட்டுமே . - அனிருத்தா பாஹல் , கோப்ராபோஸ்ட் ஆசிரியர்

கன்னடம் தேசியமொழியாக இருந்த காலமும் ஒன்றுண்டு!

படம்
  நேர்காணல் ! " கன்னட மன்னர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள் " வசுந்தரா ஃபிளியோசட் , வரலாற்று ஆய்வாளர் . தமிழில் : ச . அன்பரசு கர்நாடகாவின் வரலாறு தொடர்பாக 1960 ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார் வசுந்தரா . பண்டிதர் சென்ன பசவப்பா கவலி என்பவரின் மகளாக பிறந்த வசுந்தரா , கர்நாடக பல்கலையில் வரலாறு , பிரெஞ்சு , கல்வெட்டியல் படித்தவர் . சோர்பன் பல்கலையில் நாடகம் மற்றும் வரலாறு படிப்பில் முனைவர் பட்டம் வென்றவர் கல்வெட்டியல் குறித்த நூல்களை எழுதியுள்ளார் . 1940 ஆம் ஆண்டு தார்வாடில் உங்களது வாழ்க்கை எப்படி இருந்தது ? நெகரா ( நெசவாளர் ) இனத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம் . 1920 ஆம் ஆண்டில் கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் கற்ற தந்தை சென்னபசவப்பா , நாடகங்கள் பற்றி தடையின்றி எங்களுடன் உரையாடுவார் . ரேடியோவல் மல்லிகார்ஜூன் கான்செர்ட் நடக்கும்போது எனக்கு இளங்கலை இறுதித்தேர்வு நடக்கவிருந்தது . தேர்வு அடுத்தாண்டு எழுதிக்கொள்ளலாம் ; இந்த இசைநிகழ்ச்சி முக்கியம் என்று தந்தை கூறியதை தாயும் ஆட்சேபிக்கவில்லை . வரலாற்றில் ஆர்வம் வந்தது எப்படி ? வர

வியாழனில் என்ன நடக்கிறது?

படம்
வியாழனின் மின்னல் ! வியாழனில் ஏற்படும் மின்னல் குறித்த ரகசியங்களை நாசா கண்டறிந்துள்ளது . முதன்முதலில் இது குறித்த தகவலை 1979 ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் கண்டறிந்தது . தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு பூமியிலும் , வியாழனிலும் ஏற்படும்  மின்னல்களில் வேறுபாடு உண்டு என நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . " மின்னல் என்பது எந்த கோளில் ஏற்பட்டாலும் அது ரேடியோ அலைகளை பிரதிபலிக்கும் " என்கிறார் கலிஃபோர்னியா பசடெனா நாசா ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஷனோன் ப்ரௌன் .  Microwave Radiometer Instrument (MWR) எனும் கருவியை இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள் . இக்கருவி ஜூபிடரிலிருந்து வெளியாகும் அலைகளை பதிவு செய்கிறது . முதலில் கிடைத்த கிலோஹெர்ட்ஸ் தகவல்களை விட மின்னல் பற்றிய தகவல்கள் தற்போது மெகாஹெர்ட்ஸில் சேகரிப்பதாக நாசா கூறுகிறது . வாயேஜர் 1&2, காசினி , ஜூனோ (377 முறை ) ஆகியவை வாயுக்கோளான வியாழனின் ஏற்படும் மின்னல்களை பதிவு செய்து வருகிறது . பூமியை விட 25% குறைவான சூரியவெப்பத்தை வியாழன் பெறுகிறது . ஜூலை மாதம் ஜூனோ வியாழனை மிக அருகில் சுற்றிவரவி

அறியப்படாத அர்ஜூனா விருது வீரர்கள்!

படம்
அறியப்படாத அர்ஜூனா விருது வீரர்கள் !  1   பிரகாஷ் நஞ்சப்பா பெங்களூரில் பிறந்து கனடாவில வளர்ந்த பிரகாஷ் நஞ்சப்பா மூன்றுமுறை விருதுப்பட்டியலில் இடம்பெற்று தற்போதுதான் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் . அரிய முக முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட பிரகாஷ் , கனடாவில் பணியாற்றிக்கொண்டே துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார் . முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான பிரகாஷின் தந்தை   பிபி பாபண்ணா , வற்புறுத்தலால் வேலையை கைவிட்டு துப்பாக்கி தூக்கினார் . இந்தியாவில் பயிற்சி செய்து பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ( காமன்வெல்த 2014) வரை பதக்கம் வென்றவர் இவர் . " மூன்றுமுறை முயற்சித்து இம்முறை அர்ஜூனா விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி . ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே என் லட்சியம் . ரியோ ஒலிம்பிக்கில் முடக்குவாத சிக்கலால் , போட்டியில் பதக்கம் வெல்லமுடியவில்லை . 2020 போட்டியில் 10 மீ . பிரிவிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் 50 மீ . பிரிவிலும் சாதிப்பேன் " என்கிறார் பிரகாஷ் நஞ்சப்பா . பிரசாந்திசிங் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்த பே