இளம்வயதில்தான் புதிய மொழிகளைக் கற்ற முடியுமா?
ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி
இளம்வயதில்தான்
புதிய மொழிகளைக் கற்ற முடியுமா?
பொதுவாக ஒரு மொழியை
இலக்கணத்துடன் துலக்கமாக பயில 30 ஆண்டுகள் தேவை என்கிறது போஸ்டன் மொழிவல்லுநர்களின்
ஆராய்ச்சி. பிறமொழியை கற்க தாய்மொழியில் தேர்ச்சிபெறவேண்டும்.
பின் அம்மொழி வழியே இரண்டாவது மொழியைக் கற்பது ஈஸி. ஸ்பானிஷ், மாண்டரின் மொழியை பதினெட்டு வயது கடந்தவர்கள்
கற்று உரையாடுவதில் அதிக தவறுகள் ஏற்பட்டன. பதினெட்டு வயதுக்கு
மேல் கற்றல்திறன் குறைகிறது என சில ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.
6 லட்சத்து 70 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில்
18 வயதுக்கு மேற்பட்டோரும் மொழியை திறமையுடன் கற்கிறார்கள் என்று
தெரியவந்துள்ளது. எனவே இன்றே இப்பொழுதே மொழியை 1,2,3 சொல்லித் தொடங்குங்கள்.