சித்திரவதையில் வித்தகி!



Image result for cia haspel



விசாரணைத்திலகம் ஹாஸ்பெல்!

Image result for cia haspel




சிஐஏ அமைப்பின் இயக்குநராக கினா ஹாஸ்பெல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிபர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டார். சிஐஏவை நிர்வகிக்க ஹாஸ்பெல் தகுதியானவரா என விவாதங்கள் இன்றும் நிற்காமல் க்யூகட்டி வருகின்றன.
சிஐஏ அமைப்பின் முதல் பெண் இயக்குநரான கினா ஹாஸ்பெல்லுக்கு வயது 33. செப்.11 தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை ஹாஸ்பெல் விசாரணை செய்த முறை சர்ச்சைகுரியதாக உள்ளது. ரகசிய போலீசாக பெரும்பாலும் செயல்பட்டுள்ள ஹாஸ்பெலின் வாழ்க்கை ரகசியங்கள் நிறைந்ததாகவே இன்றும் உள்ளது. கைதிகளை டார்ச்சர் செய்து விசாரிப்பதில் புகழ்பெற்றவர் என ஹாஸ்பெலை விமர்சிக்கிறது போலீஸ் வட்டாரம்.

Image result for waterboarding torture

தாய்லாந்தில் அல்கொய்தா கைதிகளை ஹாஸ்பெல் டீல் செய்த விவகாரம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. 2002 ஆம் ஆண்டு அபு ஜூபைதா என்பவரை வாட்டர்போர்டிங் எனும் முறையில்(கை, கால்களை கட்டிவைத்து முகத்தில் துணியால் மூடி அதன் மீது நீரைப் பாய்ச்சுவது) உச்சபட்ச சித்திரவதைக்குள்ளாக்கினார் ஹாஸ்பெல் என்பது அபு ஜூபைதாவின் வழக்குரைஞர் தொடுக்கும் முக்கியக்குற்றச்சாட்டு. "சிஐஏ அதுபோன்ற விசாரணை முறைகளை இனி தொடராது" என சிஐஏ கமிஷனில் கூறியுள்ளார் ஹாஸ்பெல்.