விலை அதிகமான பொருள் தரமாக இருக்குமா?
ஆரோக்கியத்தின்
MRP?
ஆர்கானிக் பொருட்கள், கலிஃபோர்னியா
பாதம் பருப்பு, வாஷிங்டன் ஆப்பிள், ஆலிவ்
ஆயில் என ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பொருட்களின் எம்ஆர்பி எப்போதும் அதிகம்.
என்ன காரணம்? "ஊடகங்கள் ஆரோக்கியம் விலை கூடுதலாக கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற பிம்பத்தை
ஊதிப்பெருக்குகிறது" என்கிறார் வாண்டர்பில்ட் பல்கலைக்கழக
பேராசிரியர் கெல்லி ஹாஸ்.
200 நபர்களிடம்
கெல்லி ஹாஸ் குழு நடத்திய ஆய்வில் விட்டமின் ஏ, டிஹெச்ஏ ஆகிய
இரு சத்துக்கள் கொண்ட பொருட்கள் தரப்பட்டன. விட்டமின் ஏவை விட
டிஹெச்ஏ பற்றி பலரும் அறியாததால் அதனை விலை உயர்ந்ததாகவும் ஆரோக்கியம் தரும் எனவும்
ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் நம்பினர். இவ்விரண்டு சத்துக்களுமே
கண்பார்வைக்கு அவசியம்தான். அதேசமயம் ஒரே உணவுப்பொருளை குறைந்தவிலையிலும்,
அதிக விலையிலும் விற்றபோது அதிக விலையில் விற்றபொருளையே பலரும் தேர்ந்தெடுத்தனர்.
"குறைந்த விலை கொண்ட பொருட்கள் ஆரோக்கியமில்லை என்பதை மக்கள் நம்புவதுதான்
காரணம்" என்கிறார் இமோரி பல்கலைப் பேராசிரியர் ரியான் ஹாமில்டன். முடிந்தளவு தேவையான வேதிப்பொருட்கள் கலப்பில்லாத உணவுப்பொருட்களை தேர்ந்தெடுங்கள்;
கூடுதல் விலை என்ற லேபிளை முன்வைத்து பொருட்களை வாங்காதீர்கள்