வெள்ளியில் ஓரு போராட்டம்!
வெள்ளியில் ஓரு போராட்டம்!
வெள்ளி, பூமிக்கு மாற்றாக
வாழக்கூடிய கோள் அல்ல. இக்கோளில் முழுக்க சல்ப்யூரிக் அமிலத்தைக்
கொண்ட மேகங்களும் ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் உண்டு. இதனை
சமாளித்தால், ஆராய்ச்சியாளர்கள் இங்குள்ள நூறுமடங்கு அழுத்தத்திற்கு
பதில் சொல்லவேண்டியிருக்கும். இக்கோளைப்பற்றி நிறைய கேள்விகள்
இருக்கும்போது சும்மா உட்கார்ந்திருந்தால் எப்படி? உடனே நாசா
ரெடி செய்த பிளான்தான் HAVOC(High Altitude
Venus Operational Concept)
இக்கோளில் ஆராய்ச்சி செய்துவிட்டு உயிர்பிழைத்து
வரும் தொழில்நுட்பத்தை இன்னும் நாசா கண்டறியவில்லை. அமில மேகங்களுக்கு
ஐம்பது கி.மீ தள்ளி அமையும் விதத்தில் ஆராய்ச்சி நிலையத்தை வானில்
அமைக்கவிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முப்பது நாட்கள் தங்கி
ஆராய்ச்சி செய்யும் திட்டம் முடிவாகியுள்ளது. பூமிக்கு அருகில்
இருப்பதால் செவ்வாய்க்கு செல்வது போன்ற காலதாமதம் இதில் ஏற்படாது. மிதக்கும் விண்கலத்தில் இருந்து ஆராய்ச்சி செல்வதற்கு மட்டும் ராக்கெட் பயன்படுத்த
உள்ளனர். பின்னர் இந்த ராக்கெட் விண்கலத்தில் இணைக்கப்பட்டு பூமிக்கு
திரும்ப முடியும்.