உடல் உறுப்புகள் சிப்களாக!
சிப் வடிவில் உடலுறுப்புகள்!
மருந்துகளை சோதித்து
பார்க்க மனிதர்கள்,
விலங்குகள் பயன்படுத்தப்பட்டு இதற்கு பல்லாயிரக்கணக்கான கோடி செலவிடப்பட்டன.
தற்போது சிப்வடிவில் உடல் உறுப்புகள் தயாரிக்கப்படுவதால் ஆய்வுகளை செய்வது
எளிதானதாக மாறியுள்ளது. மனித செல்களை வைத்து சிப் வடிவில் உடலுறுப்புகள்
ரெடியாவதால் இனி விலங்குகளை ஆய்வுக்கு பயன்படுத்தும் தேவை இல்லை.
லேபில் செய்யப்படும்
மனித செல்களின் மீது மருந்தை செலுத்தி ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. பத்தின்
ஒன்பது மருந்துகளின் உறுதியான பின்விளைவுகள் இவ்வாய்வுகளில் தெரியவில்லை. தற்போது விரல் நகமளவு சைசிலுள்ள சிப்பில் இதயம், மூளை,
எலும்பு, சிறுநீரகம், குடல்,
தோல், நுரையீரல் உள்ளிட்ட மனிதர்களின் செல் சாம்பிள்
சேகரிக்கப்பட்டு உள்ளன. உடலில் செல்களுக்கு ஆக்சிஜனும் சத்துக்களும்
அளிக்கப்படுவதைப்போலவே சிப்பிலும் அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவில்
15% சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். சிறுநீரக நோய்களுக்கு அறிகுறிகள்
கிடையாது என்பதால் பலரும் நோயை அறிவதேயில்லை. சிறுநீரகத்தை சிப்
வடிவில் உருவாக்கி வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் நோர்டிஸ் இன்க் எனும் உயிரித்தொழில்நுட்ப
நிறுவனமும் இணைந்து செய்து வருகின்றன.