நிபாநோயாளிகளுக்கு இறுதிச்சடங்கு செய்த மருத்துவர்!



Image result for nipa patients cremation kerala doctor gopakumar



நோயாளிக்கு இறுதிச்சடங்கு செய்த டாக்டர்!

கேரளாவில் வௌவால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ் இன்றுவரை மக்களை பயமுறுத்திவருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை செய்த நர்ஸ் லினி சஜீஸ் நிபாவால் உயிரிழந்தது உலகம் கவனிக்கும் செய்தியானது.  உடனே உஷாரான கேரள அரசு இந்நோயை கட்டுப்படுத்த மெனக்கெட்டு வருகிறது.


நிபா நோயால் இறந்தவரை புதைக்க கூட உறவினர்கள் அஞ்சியநிலையில் அவருக்கு இறுதிமரியாதையை கோழிக்கோடு சுகாதார அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.கோபகுமார் செய்து மனிதநேயத்திற்கு உதாரணமாகியுள்ளார். 25 வயதான ரசினின் தந்தை நிபாவுக்கு பலியானவர்தான். ரசினின் தாய்க்கும் நோய்த்தொற்றுக்கான சிகிச்சை நடைபெற்றுவரும் நிலையில் ரசின் நிபாவால் பரிதாபமாக இறந்துபோனார். "ரசினுக்கு இறுதிச்சடங்கு செய்ய இருமுறை யோசிக்கவில்லை. அவரின் அம்மாவிடம் அனுமதி பெற்று கௌரவத்துடன் அவரின் உடலை தகனம் செய்தோம். இது என் கடமை" என உறுதியான குரலில் பேசுகிறார் டாக்டர் கோபகுமார். இதுவரை நிபாவால் தாக்குற்று இறந்த 12 நபர்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்

பிரபலமான இடுகைகள்