மக்களுக்கு மது! பசுவுக்கு வாழ்க்கை!




Related image



வீரர்களுக்கு சம்பளம் கட்!

Image result for sportsperson tax at haryana



அண்மையில் ஹரியானா அரசு விளையாட்டு வளர்ச்சிக்காக செய்த அதிரடியாக மாநில வீரர்களின் சம்பளத்தை கட் செய்துள்ளது. எதற்கு? விளையாட்டு வளர்ச்சிக்காக.

நம்புங்கள். ஹரியானா அரசின் விளையாட்டுத்துறை, அனைத்து மாநில விளையாட்டு வீரர்களும் தம் சம்பளத்தில் மூன்றில் ஒருபகுதி சம்பளத்தை விளையாட்டு கவுன்சிலில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது. "வர்த்தகரீதியான அல்லது மாநில அரசின் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தம் ஊதியத்தில் மூன்றில் ஒருபகுதியை விளையாட்டு கவுன்சிலில் செய்து விளையாட்டு வளர்ச்சிக்கு உதவ வேண்டும்" என அறிக்கையில் ஹரியானா விளையாட்டுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு மல்யுத்த வீராங்கனை கீதாபோகத் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

மக்களுக்கு மது! பசுவுக்கு வாழ்க்கை!

இப்படியெல்லாம் ஐடியா கொடுக்கும் மங்குணி அமைச்சர்கள் யார் என்றே தெரியவில்லை. ராஜஸ்தானில் அப்படி ஒரு ஐடியாவை செயல்படுத்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

ராஜஸ்தானில் எவ்வளவு மது குடிக்கிறீர்களோ அந்தளவுக்கு பசுக்கள் நலமாக வாழும். அங்குள்ள மதுக்கடைகளில் குடிமகன்கள் வாங்கும் மதுவுக்கு போடும் வரியில் பசுநலவரியும் அடக்கம். தற்போது மதுவகைகளில் வசூலிக்கும் 10 சதவிகித பசுநேச வரியில் இன்னும் 10% அதிகரிக்க அரசு  உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2016-17 ஆம் ஆண்டில் மட்டும் பசு சேவைக்கான வரியாக வசூலிக்கப்பட்ட தொகை 151.60 கோடி மட்டுமே. மேலும் இந்தியாவில் ஏன் உலகிலேயே பசுவுக்கான தனி அமைச்சகம், அதற்கென அமைச்சர் நியமித்து கின்னஸ் புக்கில் பிரசுரிக்கப்படாத சாதனையை செய்துள்ள ஒரே மாநிலம் ராஜஸ்தான்தான். பெருமைப்பட்டுக்கோங்க மக்களே! 

பிளாஸ்டிக் மீட்டிங்!

அட்வைஸ் செய்துவிட்டு அசால்டாக அதை மீறுபவர்களை ஊருக்குத்தான் உபதேசம் என கிராமங்களில் கிண்டலாக சொல்லுவார்கள். மகாராஷ்டிரா முதல்வர் அதனை உலகிற்கே மீட்டிங் போட்டு சொல்லிவிட்டார் அவ்வளவுதான். நடந்தது என்ன?

உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடிய மறுதினம் நாளிதழ்களில் வெளியான ஒரு படத்தை பார்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஷாக் ஆனார்கள். பிளாஸ்டிக்கை எப்படி ஒழிக்கலாம் என மகாராஷ்டிரா முதல்வர் தன் அமைச்சரவை சகாக்களோடு டிசைன் டிசைனாக யோசிக்கும் புகைப்படம்தான் அது. ஐடியா ஓகே. ஆனால் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் மீட்டிங்கில் பிளாஸ்டிக் வாட்டர்பாட்டிலை டேபிள் மேலேயே தில்லாக வைத்திருந்தது பலருக்கும் குண்டலியில் சூட்டை கிளப்ப, நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர். ஏனெனில் மகாராஷ்டிரா அரசு முன்னமே பிளாஸ்டிக் பைகள், பொருட்களுக்கு தடை விதித்திருந்த நிலைமையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அரசின் தடை உத்தரவு லட்சணத்தை ஊருக்கே காட்டிவிட்டது. 


ரயில்வே சலூன்!

இந்தியன் ரயில்வே மெல்ல பிரீமியமான போக்குவரத்து சேவையாக மாறிவருகிறது. அதிக எக்ஸ்பிரஸ் ரயில்கள், புல்லட் ரயில்திட்டம் என அடுத்தபடியாக சலூன் வசதியும் விரைவில் ரயில்களில் தொடங்கவிருக்கிறது.

வருமானத்தை அதிகரிக்க ரயில்வே விரைவில் சலூன் இயங்கும் வகையில் இன்ஸ்பெக்‌ஷன் கோச்சை தொடங்கவிருக்கிறது. இரண்டு படுக்கையறை, டைனிங் அறை, கழிவறை, சமையலறை ஆகியவை இதில் அமைக்கப்பட்டிருக்கும். ரயில்வே அதிகாரிகள், அமைச்சர்கள் பயன்படுத்திவரும் இந்த வசதி இனி கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் மக்களுக்கும் கிடைக்கும். ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி, கட்டிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இவ்வசதி கிடையாது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் 24 கோச்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்புதிய சலூன் வசதி சுற்றுலா பயணிகளை காந்தமாய் இழுக்கும் என்பது இந்தியன் ரயில்வேயின் நம்பிக்கை.