எண்ணெய் கம்பெனியை மூட சிறுமி நடத்திய போராட்டம்!
எண்ணெய்க்கு எதிரி!
பதினேழு வயதான நல்லேலி கோபோ எண்ணெய் துறைக்கு எதிராக ஒன்பது
வயதிலிருந்து போராடி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸில்
எரிபொருளுக்காக ஹைட்ராலிக் முறையில் அகழ்ந்தெடுக்கும் கம்பெனிகள் நிலத்தை
துளையிட்டபோது பிரச்னை தொடங்கவில்லை. மெல்ல காற்றில் கலந்த வேதிப்பொருட்கள்
மக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்களை தர(மூக்கில் ரத்தம்
வடிதல், தீராத தலைவலி, வயிற்றுவலி)
ஏன் கோபாவின் உடலிலும் ஆஸ்துமா தலைகாட்ட போராட்டம் தொடங்கியது.
கோபோ தன் தாய் உள்ளிட்ட மக்களுடன் இணைந்து நடத்திய போராட்டம்
தற்காலிக வெற்றிபெற்றதோடு அமெரிக்க செனட்டரான பார்பராக பாக்ஸரின் ஆதரவையும்
பெற்றுள்ளது. 2மில்லியன் அபராதம் விதிக்கப்பட்ட ஆலன்கோ ஆயில்
நிறுவனம், 2013 ஆம் ஆண்டு சூழல் ஆணையத்தால் மூடப்பட்டது."நிறுவனத்தை மூட 30 ஆண்டுகளாக போராடிவருகிறோம்.
திரும்ப திறக்கப்படும் என்கிறார்கள். எதிர்காலத்தில்
எனது பேரன், பேத்திகள் கூட எண்ணெய் கிணறுகளை அதிசயம் போல
எண்ணிப்பேசவேண்டும் என்பதே லட்சியம்" என்கிறார் கோபோ.
இளம்புரட்சிப்பெண் விரைவில் மேல்நிலைக்கல்வியை நிறைவு செய்ய
இருக்கிறார்.