திங்கள் பிட்ஸ்! கோக்கோலா ஓனர் சர்பத் விற்றாரா?



Image result for rahul gandhi caricature


கோககோலா ஓனர் யார்?


Image result for rahul gandhi caricature


டெல்லியில் ஓபிசி பிரிவு மக்களின் திறமைகள் குறித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்களைப் பற்றி வாய்க்கு வந்ததை பேசியது இணையத்தில் காமெடி வைரலாகி வருகிறது.

எலுமிச்சை சர்பத்் விற்றவர் கோககோலா நிறுவனர், மெக்டொனால்ட் உணவக தலைவர் முதலில் தாபா வைத்திருந்தார் என்று ஆளும் கட்சி அமைச்சர்களை விட உளறிக்கொட்டி, நெட்டிசன்களின் மீம்ஸில் வாலன்டியராகவே ராகுல்காந்தி அட்மிட் ஆனார். காம்ப்ளான் நிறுவனர் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, கோககோலா நிறுவனர் இவர்தான் என மீம்ஸ்களை டஜன்கணக்கில் போட்டு ராகுலை கலாய்த்து தள்ளிவிட்டனர். உண்மையில் கோக்கோலா ஓனர் அசா கிரிக்ஸ் கேண்ட்லர், மருந்துக்கடையில் கிளர்க்காக இருந்து பின்னர் கோலா பார்முலாவை 550 டாலர்களுக்கு வாங்கினார் என்பதே உண்மை. எலக்‌ஷன் முடிஞ்சாச்சே ப்ரோ?   

2
மோடி பெயரில் மோசடி!

டெல்லியைச் சேர்ந்த நந்நிகிஷோர் சின்கா தன் தந்தையின் விபத்து செலவுக்கு அரசு உதவி கிடைக்குமா என்று இணையத்தில் தேடிவந்தார். அப்போது கிடைத்த இணையதளம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத மோசடி பாடத்தை கற்பித்தது.

மோடி சுகாதார திட்டம் என்ற பெயரில் இருந்த கடன் இணையதளத்தில் அப்ளிகேஷனை சிரத்தையாக நிரப்பி அனுப்பினார். உடனே சுதீர் ஜோஷி என்பவர் தொடர்புகொண்டு ஆதார், வங்கி கணக்கு விவரங்களோடு வங்கி பரிவர்த்தனை கட்டணம் 1.39 லட்சத்தை பேசிப்பேசியே கறந்துவிட்டார். பின்னர் சுதாரித்த சின்கா போலீசில் புகார் அளித்தபின்தான் நிறையபேர் மோடி மோசடி பிளானில் ஏமாந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இம்மோசடியில் ஈடுபட்ட மாயூர் விகாரிலுள்ள எட்டுப்பேர்களை போலீஸ் சைபர்செல் கைது செய்துள்ளது.

3

சர்ச் மீதும் வழக்கு!

ஆஸ்திரேலிய ராயல் கமிஷன், பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகள் நாட்டில்  அதிகரித்து வருவதால் தொடர்புடைய தேவாலயம் உள்ளிட்ட அமைப்புகள் மீது வழக்கு தொடர அனுமதித்தது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் மீது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளது. தேவாலயம், பள்ளி, ஸ்போர்ட்ஸ் கிளப், காப்பகங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகியவையும் இந்த சட்டவிதிக்குள் உள்ளடங்கும். "நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இனி தேவாலயங்கள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குதொடர்ந்து இழப்பீட்டை பெற சட்டம் வழிசெய்யும்" என்கிறார் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரால மார்க் ஸ்பீக்மென்.

ஃபேர்வெல்லுக்கு நோட்டீஸ்!

மேற்குவங்காளத்திலுள பிஎஸ்எஃப் படையைச் சேர்ந்த மூத்த வீரரின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்றாத வீரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

மேற்கு வங்காளத்திலுள்ள 155 ஆவது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் தாமோதர், அண்மையில் நடைபெற்ற மூத்த வீரரின் பிரிவு உபசார விழாவில் தனிப்பட்ட காரணங்களுக்கான பங்கேற்கவில்லை. விழாவில் அனைவரையும் கணக்கெடுத்த தாமோதரின் மூத்த அதிகாரி, அடுத்தநாள் ஏன் வரவில்லை என தாமோதருக்கு விளக்கம் கேட்டு அதிகாரப்பூர்வ நோட்டீசைத் தந்தார். டென்ஷனாக இன்ஸ்பெக்டர் பதிலுக்கு "பிரிவு உபசார விழா ஒன்றும் அதிகாரப்பூர்வ அரசு விழா அல்ல" என கரம் மசாலாவை எழுத்தில் கலந்து லெட்டர் எழுத பணிச்சூழல் இறுக்கமாகியுள்ளது. கடந்த மார்ச்சில் பிரதமரின் பெயருக்கு முன் போட்டு பேசாத வீரரின் ஏழு நாள் சம்பளம் கட் ஆனது நினைவிருக்கலாம்.
;font-family:TAUN_Elango_Valluvan'>