ஊட்டச்சத்து நிதியை குறைக்கும் இந்திய மாநிலங்கள்!
அறிவோம்
தெளிவோம்!
இந்திய
அரசும் மாநிலங்களும் விற்கும் பொருட்கள் சேவைகளுக்கேற்ப வரிவிகிதத்தை அமைத்து அதனை
மக்களிடம் வசூலித்து அரசு நடத்துகின்றன. வரிகளின் மூலம் மக்களை பராமரிக்கும் பொறுப்பை கைகழுவியுள்ள பதினான்கு
மாநிலங்கள் குழந்தைகளுக்கான நுண்ணூட்டச்சத்து திட்டங்களுக்கான(Supplementary
Nutrition Programme or SNP) நிதியை
குறைத்துள்ளன.
ஐசிடிஎஸ்
எனும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு திட்டம் நகரத்தில் 35.6 சதவிகிதமும், 53 சதவிகிதம் கிராமத்திலும்
செலவழிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்பநல ஆய்வு(2015-2016) அறிக்கை
தகவல் தெரிவிக்கிறது. இதில் பல்வேறு குடும்பங்களும் 55-61
சதவிகிதம் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் ஆகும்.
2016-17
காலகட்டத்தில் இந்தியாவிலுள்ள பதினான்கு மாநிலங்களில்
நுண்ணூட்டச்சத்துக்கு செலவிடப்பட்ட நிதியின் விகிதம் 3%-55% ஆகும்.
இதில் மத்திய அரசு, மாநிலங்கள் இரண்டு
நுண்ணூட்டச்சத்துக்களுக்கு செலவிடத்தேவையான நிதிக்காக 32 சதவிகித
வரிவருவாயை 42 சதவிகிதமாக மாற்றி அளித்தன(14 ஆவது நிதி கமிஷன் 2015). நிதியைக் குறைத்துள்ள
மாநிலங்கள்: ஜம்மு காஷ்மீர், மேற்கு
வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா,
பஞ்சாப், அசாம், பீகார்,
ஜார்கண்ட், திரிபுரா, கேரளா,
தெலங்கானா, சத்தீஸ்கர், நாகலாந்து.