அச்சுறுத்தும் தொற்றுநோய் ஸ்கேபிஸ்!


  1. Image result for scabies




அகதிகளைத் தாக்கும் நோய்!

முகாமில் நெருங்கி வாழும் அகதிகளுக்கு ஸ்கேபிஸ் எனும் நோய் பரவத்தொடங்கியுள்ளது. இந்தியா, சீனா, மத்தியக்கிழக்கு நாடுகளில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கேபிஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. சின்னம்மை, தட்டம்மைக்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் பாதிக்கும் நோய் ஸ்கேபிஸ். சுகாதாரமற்ற அகதிகள் முகாமில் எளிதாக பரவும் நோயில் முதலிடம் வகிப்பது இதுவே.

பிரான்சின் சப்பல்லே அகதிகள் முகாமில் தற்போது வேகமாக பரவிவரும் ஸ்கேபிஸ், கடந்த பத்தாண்டுகளிலும் தொற்றுநோய்களில் முன்னணி வகிக்கிறது. permethrin, benzyl benzoate and oral ivermectin  ஆகிய மருந்துகள் ஸ்கேபிஸ் நோயைத் தீர்க்க உதவுகின்றன. உலக மக்கள் தொகையில் 4 சதவிகித மக்கள் ஸ்கேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். வளரும் நாடுகளில் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளின் விகிதம் 5-10%. மத்திய அமெரிக்கா, பசிபிக் தீவுகள், வடக்கு ஆஸ்திரேலியா ஆகியவை(30% மக்கள்) ஸ்கேபிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனஒட்டுண்ணியால் தோலில் அரிப்பு ஏற்பட்டு Streptococcus pyogenes (S. pyogenes) or Staphylococcus aureus (S. aureus)  உள்ளிட்ட பாக்டீரியாக்களின் தாக்குதல்(septicaemia)) தொடங்குவது இதயம் உள்ளிட்ட உறுப்புகளை சேதமுறச்செய்யும்.




பிரபலமான இடுகைகள்