வீக் எண்ட் பிட்ஸ்: கிரகாம்பெல் உச்சரித்த முதல் வார்த்தை



Image result for graham bell Ahoy


பிட்ஸ்!

சிலந்தி தன் வலையை தானே விழுங்கி பின்னர் வலையை ரீசைக்கிள் செய்து கட்டுகிறது.

முதல் உலகப்போரில்(1914-18) ராணுவ வீரர்களுக்கு டூநட் வழங்கிய தன்னார்வலர்களை நினைவுகூறும்பொருட்டு தேசிய டூநட் தினம் கொண்டாடப்படுகிறது.

1878 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் தொலைபேசி சேவையைத் தொடங்கியபோது சொன்ன  முதல் வார்த்தை Ahoy.

அமெரிக்காவின் பெயர் காரணத்திற்கு ஆதாரமாக கூறப்படும் Amerigo Vespucci என்பவர், இத்தாலியைச் சேர்ந்த வியாபாரி.


ஐம்பது வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி நூலை எழுத டாக்டர் சியூசிடம் எடிட்டர் பென்னட் செர்ஃப் சவால் விட, டாக்டர் சியூஸ் அதனை ஏற்று எழுதிய நூலின் பெயர் Green Eggs and Ham.