இடுகைகள்

மலேரியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காம்பியா நாட்டில் மலேரியாவைக் கண்டறிந்த நாய்!

படம்
  நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.அதனுடன் மனிதர்களை ஒப்பிடக்கூட முடியாது. அந்தளவு தொலைவில் வாசனையைக் கண்டறியும் மோப்ப சக்தியின் இடைவெளி உள்ளது. இரட்டையர்களாக பிறந்தாலும் கூட ஒருவரின் உடல்மணம் வேறுபட்டிருக்கும். நாயால் அதை உடனடியாக கண்டறிய முடியும். ஒருவர் வீட்டுக்கு வரும் வழியில் குப்தா பவனில் சாப்பிட்ட குலோப்ஜாமூன், நண்பரின் செல்ல பூனையைத் தூக்கி கொஞ்சியது. யார்லி சென்ட் மணக்கும் காதலியை கட்டி அணைத்தது, பூங்கொத்துகளை பாராட்டாக நண்பரிடம் பெற்றது என மோப்பம் பிடித்தே நாயால் அனைத்தையும் அறிய முடியும். நான் லீனியராக இருந்தாலும் உண்மையை அறிந்துவிட முடியும். போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள், கொலை தடயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய அதற்கென பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் உள்ள மனநிலையை, அவரது உடலில் சுரக்கும் வேதிப்பொருட்களை வாசனையை முகர்ந்தே நாயால் உணர முடியும். தற்போது, அறிவியலாளர்கள் நாயின் மோப்பம் பிடிக்கும் திறனை அடிப்படையாக கொண்டு வேபர் டிடெக்டர் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். இப்போதைக்கு அதன் செயல்திறன் நாயின் மோப்பத் திறனை விஞ்சும் அளவுக்கு இல்லை. ஆனால் எதிர்கா

சுற்றுலாப்பயணிகளால் ஏராளமான பறவைகள் அழிந்துள்ளன! - சூழலியலாளர் பாரா இஷ்தியாக்

படம்
  சூழலியலாளர் பாரா இஷ்தியாக் பறவைகளை அழித்ததே தொற்றுநோய்கள்தான்!  கடந்த இருபது ஆண்டுகளாக பறவைகளுக்கு பரவும் தொற்றுநோய்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் ஃபரா இஷ்தியாக். 49 வயதாகும் ஃபரா , பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி தனித்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்கிறார். அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் மரபணு பாதுகாப்பு மையத்தில் முனைவர் படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் வழியாக ஹவாயிலுள்ள   பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி ஆய்வுகளை செய்தார்.  ”ஹவாயைச் சேர்ந்த 90 சதவீத பறவைகளை அழிவின் விளிம்பிற்கு தள்ளியதே மலேரியாவும், அம்மை நோயும்தான் ” என்றார் ஃபரா. ஐரோப்பிய கடல் பயணிகளின் வருகையால் பறவைகளுக்கு மலேரியா, அம்மை நோய் பாதிப்பு தொற்றியது. இவற்றுக்கு இயல்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. எனவே, எளிதாக நோய்தாக்கி பலியாகிவிடுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.  கடந்த பத்தாண்டுகளாக இமாலயப் பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றி ஃபரா ஆராய்ந்து வருகிறார். தனது ஆய்வின் வழியாக மலேரியா ஒட்டுண்ணிகள் எப்படி பரவுகின்றன, அதற்கு உதவும் சூழல் ஆகியவற்றை அடையாளம் கண்டார். பறவைகளைப் பிடித்து ஆய்வுத்தரவுகளை எடுக்க 4

மலேரியாவுக்கு புதிய முறையில் தடுப்பூசி தயாரிப்பு!

படம்
  மலேரியாவுக்கு புது மருந்து வெயிலுள்ள ப்ரூட் ஸ்மூத்தி குடிப்பது நல்லது என எலைட் இதழ்களில் எழுதுவார்கள். படித்திருப்பீர்கள். ஆனால் உடல் நலனுக்கு கொசு ஸ்மூத்தி வந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆராய்ச்சிகள் அப்படித்தான் அறிகுறிகளைக் காட்டுகின்றன.  லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களின் உடலிலிருந்து ஒட்டுண்ணிகளை எடுத்து அதனை சுத்திகரித்து தடுப்பூசியாக பயன்படுத்த முடியுமா என்பதை சோதித்து வருகின்றனர். இந்த முறையில் வேகமாக ஒட்டுண்ணிகளை சேகரித்து அதனை சுத்திகரித்து தரமான மலேரியா தடுப்பூசியாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர்.  பிளாஸ்மோடியம் என்பதுதான் மலேரிய ஒட்டுண்ணி. இதுதான் பெண் அனோபிலஸ் கொசுக்களின் உடலைத் தாக்கி அக்கொசு கடிக்கும் போது மனிதர்களின் உடலில் நோயை ஏற்படுத்துகிறது.  பிளாஸ்மோடியம் தற்போது மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளை எதிர்கொள்ளும் சக்தியை பெற்றுவருகிறது. எதற்காக மலேரியாவுக்கென திடீர் ஆராய்ச்சி? மலேரியாவால் உலகமெங்கும் 4 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இதில் 61 சதவீதம் பேர் குழந்தைகள்தான். அதுவும் ஐந

கொசுவைக் கொல்லும் பூஞ்சைக் காளான்!

படம்
மலேரியா கொசுக்களை கொல்லும் காளான். மரபணு மாற்றப்பட்ட பூஞ்சைக் காளான், தன்னிடமுள்ள விஷத்தின் மூலம் 45 நாட்களில் மலேரியா கொசுக்களை அழிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பார்க்க ஆல் அவுட் விளம்பரம் போல இருந்தாலும் விஷயம் உண்மைதான். மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த கொசு ஒழிக்கும் பூஞ்சைக் காளான் குறித்த ஆராய்ச்சியைச் செய்தனர். 2017 ஆம் ஆண்டு இந்த கண்டுபிடிப்பு குறித்து அறிவித்தனர். ஆனால் கொசுக்களை உறுதியாக அழிக்கும் என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த பூஞ்சைக் காளானின் பெயர்  Metarhizium pingshaense. தன் மேல் உட்காரும் கொசுவை எளிதில் உணரும் காளான், குறிப்பிட்ட வேதிப்பொருளைச் சுரக்கிறது. அது கொசுக்களின் ரத்த த்தில் கலந்து அதன் இனப்பெருக்கும் திறனைக் குறைத்து அதனைக் கொல்லுகிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் ரேமண்ட் எஸ்டி லீகர்.  நன்றி: பிபிசி

அமெரிக்காவை அச்சுறுத்தும் லைம் நோய்!

படம்
காய்ச்சல் அடிக்கிறதா, குளிருகிறதா, நரம்புரீதியாக பிரச்னைகள் இருக்கிறதா? இதயத்துடிப்பு அடிக்கடி எகிறுகிறதா? அப்படியானால் கையைக் கொடுங்கள். அப்படியே குளுக்கோஸ் ஏற்றிவிடலாம். ஆம். உங்களுக்கு லைம் எனும் நோய் பாக்டீரியாக்களால் ஏற்பட்டுள்ளது. எலிகளிடமிருந்து பரவும் இந்த நோயை உண்ணிகள் நமக்கு பரப்புகின்றன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை இந்த லைம் நோய் பாதிக்கிறது. இந்த நோயைத் தடுக்க ஜீன் ட்ரைவ் எனும் முயற்சியை எம்ஐடி நிறுவனம் முன்னெடுத்துள்ளது. எலிகளின் மரபணுக்களை மாற்றுவதே ஐடியா. இதனை கெல்வின் எஸ்வெல்ட் என்ற அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். நோக்கம் மலேரியா போன்ற தடுக்க சிர மான நோய்களை இம்முறையில் தீர்க்கலாம் என நம்பிக்கை தருகிறார் இவர். பாக்டீரியாக்களின் டிஎன்ஏவில் செய்யும் மாறுதல் சில தலைமுறைகளுக்கு நோய் பரவலைத் தடைசெய்யும் என்பது இவரது கூற்று. இதில் தவறுகள் நேர்ந்தால் அடுத்த தலைமுறையே இருக்காது என்று கூறுகின்றனர். இதற்கு அவரே அடுத்த திட்டமாக டெய்ஸி ட்ரைவ் என்பதையும் முன்வைக்கிறார். சாத்தியமோ இல்லையோ பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றலாம் என நம்பிக்கை தருகிறார் கெல்வின்.