அமெரிக்காவை அச்சுறுத்தும் லைம் நோய்!





Image result for lyme disease




காய்ச்சல் அடிக்கிறதா, குளிருகிறதா, நரம்புரீதியாக பிரச்னைகள் இருக்கிறதா? இதயத்துடிப்பு அடிக்கடி எகிறுகிறதா?

அப்படியானால் கையைக் கொடுங்கள். அப்படியே குளுக்கோஸ் ஏற்றிவிடலாம். ஆம். உங்களுக்கு லைம் எனும் நோய் பாக்டீரியாக்களால் ஏற்பட்டுள்ளது.

எலிகளிடமிருந்து பரவும் இந்த நோயை உண்ணிகள் நமக்கு பரப்புகின்றன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களை இந்த லைம் நோய் பாதிக்கிறது.

இந்த நோயைத் தடுக்க ஜீன் ட்ரைவ் எனும் முயற்சியை எம்ஐடி நிறுவனம் முன்னெடுத்துள்ளது. எலிகளின் மரபணுக்களை மாற்றுவதே ஐடியா.

இதனை கெல்வின் எஸ்வெல்ட் என்ற அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். நோக்கம் மலேரியா போன்ற தடுக்க சிர மான நோய்களை இம்முறையில் தீர்க்கலாம் என நம்பிக்கை தருகிறார் இவர். பாக்டீரியாக்களின் டிஎன்ஏவில் செய்யும் மாறுதல் சில தலைமுறைகளுக்கு நோய் பரவலைத் தடைசெய்யும் என்பது இவரது கூற்று. இதில் தவறுகள் நேர்ந்தால் அடுத்த தலைமுறையே இருக்காது என்று கூறுகின்றனர்.

இதற்கு அவரே அடுத்த திட்டமாக டெய்ஸி ட்ரைவ் என்பதையும் முன்வைக்கிறார். சாத்தியமோ இல்லையோ பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றலாம் என நம்பிக்கை தருகிறார் கெல்வின்.


உலகெங்கும் 30 ஆயிரம் நோயாளிகள் லைம் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் 3 லட்சம் நோயாளிகள் லைம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது மருத்துவர் வட்டாரச் செய்தி.


அமெரிக்காவில் பதினான்கு மாநிலங்களில் 95 சதவீத லைம் நோய் அறிகுறிகள் கிடைத்துள்ளன.


2015 ஆம் ஆண்டு மட்டும் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான மக்கள் இறந்துள்ளது எந்த நோயினால் தெரியுமா? மலேரியா.


மலேரியாவைப் பரப்பும் பெண் கொசு உயிர்வாழும் நாட்கள் - ஒரு மாதம்.

நன்றி: க்வார்ட்ஸ்