உன்னைக் கொல்ல ஆசை! - அசுரகுலம்





அசுரகுலம் 

வாங் ஃபாங்

வாங் ஃபாங் செய்தது சீரியல் கொலைகளா என்பதிலேயே சீன காவல்துறை குழம்பி வருகிறது. ஏனெனில் தொண்ணூறுகளில் சீனாவில் தடைசெய்யப்பட்ட எலி விஷமான துஷூகுயாங் என்பதை வாங் பயன்படுத்தினார். இந்த சிம்பிள் டெக்னிக் மூலமே குடும்ப உறுப்பினர்களை கொன்று போட்டார். அதாவது எட்டு பேர்களை. ஆனால் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. காரணம், அவர்கள் குடியிருந்த வீடு ஒரு பேய் வீடு என்ற மூடநம்பிக்கைதான் காரணம்.

வாங், அவர்களது குடும்பத்தினரைக் கொல்வதற்கு என்ன காரணம் தெரியுமா? பெண்களுக்கு மனதில் எப்போதும் நொடிக்கொரு தரம் பூக்கும் பொறாமைதான். அது கொஞ்சம் வாங்கிற்கு அதிகம் அதனால் நம்பிக்கையைக் காப்பாற்றாத காதலுக்குக் கூட விஷம் வைத்துக் கொன்றார். அதனாலேயே போலீசிலும் மாட்டிக்கொன்றார். ஆனாலும் என்ன நினைத்ததை சாதித்து விட்டார். அவ்வளவுதான்.

ஹூவான் யாங்

இந்த சீரியல் கொலைகாரர், 25 க்கும் மேற்பட்ட இளைஞர்களை கொன்று ஊறுகாய் போட்டார். இவரிடமிருந்து தப்பி போலீசுக்கு புகார் சொல்ல ஓடிவந்தார் ஓர் இளைஞர். உடனே காரை எடுத்துக்கொண்டு யாங் வீட்டுக்குச் சென்றால் பெரும் அதிர்ச்சி. கொலை செய்யும் அவசரத்தில் உடல்களைக்கூட தகனம் செய்ய யாங்கிற்கு நேரமில்லை. வீட்டிலேயே கோரைப் பாயை சாத்தி வைத்திருப்பது போல சவங்களை வைத்திருந்தார் மனிதர்.போலீஸ் அதிர்ந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் யாங்கை போலீஸ் நிலையத்திற்கு கூட்டி வந்து கொலை கேஸ்களை அவரது தலையில் கட்டினர்.


யாங் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கு ஹிட் மேன் போல கொலைகாரர் ஆகவேண்டும். கொலைகாரனாக தன்னை உணரவேண்டும் என்பதே ஆசை. மிக பிரபலமாக உள்ள கஃபேக்களுக்கு சென்று, அங்கு வரும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து கல்விக்கு உதவுவதாக தூண்டில் போடுவார். மசிந்தால் அவர்களுடனே நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு பில் கொடுத்துவிட்டு அவர்களை அழைத்து வீட்டுக்கு செல்வார். அங்கேயே துணியை கழுத்தில் போட்டு இறுக்கி கொல்வார். முன் அல்லது பின் வல்லுறவு செய்வது இவரின் வழக்கம்.

இளமைக்காலம் 

ஹூவான் யாங், சூழலால் சீரியல் கொலைகாரராக மாறவில்லை. பள்ளியில் படிக்கும்போது அங்கு நடத்திய பத்திரிகைகளில் தான் என்னவாகவேண்டும என்பதை எழுதியிருக்கிறார். கொலைகாரராக மாறும் ஆசை என்னை பிடித்தாட்டியது என போலீசில் கூறியவரை சிறுவயதில் கண்டுகொள்ளாமல் விட்டது யாரின் தவறு?


2001 ஆம் ஆண்டு அதற்கான வாய்ப்பு வந்தது. ஹெனன் பகுதியில் கூலி தொழிலாளராக வேலை செய்து வந்தார் யாங்.

ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: rabrewster.com, pinterest.com