எறும்புகளின் பரிணாம வளர்ச்சி!
எறும்புகள் குறித்த ஆய்வு
அறுபது ஆண்டுகளாக எறும்புகள் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறவர், உயிரியலாளர் எட்வர்ட் ஓ வில்சன். விரைவில் 90 வயது ஆகப்போகிறது. ஆனாலும் ஆராய்ச்சியிலும், பேச்சிலும் உற்சாகம் குறையவில்லை. சிறுவயதிலிருந்தே அலபாமாவில் எறும்புகளை தேடிப்பிடித்து அதன் பின்னாலே அலைந்து திரிந்தவர், தன் 29 வயதில் ஹார்வர்டு பல்கலையில் எறும்பு ஆராய்ச்சியில் சேர்ந்தார். பின்னர் 1960 ஆம் ஆண்டு சூழலியலாளர் ராபர்ட் மெக் ஆர்த்தரோடு இணைந்து வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை அவரை புகழ்பெற செய்தது. அறிமுகம் போதும்.
அவரிடம் பேசுவோம்.
உங்களுக்கு இந்த ஜூனில் 90 வயது ஆகிறது என அறிந்தோம். முன்கூட்டியே உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி. ஆனால் எனக்கு 90 வயது ஆனதுபோல் உணர்வில்லை. 45 வயது ஆனது போலவே தோன்றுகிறது. நான் என் நாற்பது வயதில் படுக்கையிலிருந்து எழுந்த என்ன செய்வேனோ அதையேதான் 90 வயதிலும் செய்து வருகிறேன்.
நான் ஆண்டுக்கு ஒரு புத்தகம் என இயற்கை குறித்து எழுதி வந்தேன். இன்றும் இயற்கை சார்ந்த பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். கோரங்கோசா இயற்கை பூங்காவுக்கு சென்று வர திட்டமிட்டுள்ளேன். மொசாம்பிக்கில் உள்ள அப்பூங்காவைப் பற்றித்தான் என்னுடைய அடுத்த நூல் பேசுகிறது. புயல் காரணமாக என் பயணம் தடைபட்டுள்ளது.
நான் பயணம் செய்யாவிட்டாலும் அடுத்தடுத்த நூல் வேலைகள் என்னை நகரவிடாமல் செய்துள்ளன.
நீங்கள் தீவிரமான வேலை விருப்பம் கொண்டவர் என்று சொல்லலாம் தானே?
கண்டிப்பாக. எப்போதும் துறை சார்ந்து வேலை செய்து வருவது தவறானதாக கூற முடியாது. இரண்டாம் உலகப்போர் சமயம் எனக்கு பதிமூன்று வயது. அப்போது நாளிதழ்களை வீடுகளுக்கு போடும் பணிக்கு ஆளே இல்லை. காரணம், பதினெட்டு வயதானவர்கள் அனைவரும் போருக்கு போய்விட்டனர். அப்போது அப்பணியை நான் ஏற்றேன். மொபைல் பிரஸ் ரெஜிஸ்டர் என்ற பத்திரிகையை 420 பிரதிகள் விற்றுவிட்டு ஏழுமணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டு பள்ளி செல்வேன்.
நான் அந்த வேலையை பள்ளி படிப்புடன் செய்து வந்தேன். அதனை இயல்பாகவே ஏற்றுச்செய்தேன். இன்று அதேபோல பெரிய நூல்களை எழுதுகிறேன். இரண்டுமே கடினமான உழைப்பை கோருகிற பணிகள்தான்.
உங்களது சாதனையாக எதனைக் கூறுவீர்கள்?
நான் சில புதிய ஐடியாக்களையும் நெறிகளையும் உருவாக்கியுள்ளேன். தீவு உயிரி புவியியல் குறிப்புகள் என்பது நான் உருவாகியது என்று கூறலாம். எறும்புகள் எப்படி பேசிக்கொள்கின்றன என்பதற்கான வேதியியல் வடிவத்தை உருவாக்கினேன். என்சைக்ளோபீடியா ஆஃப் லைப் என்பது என் சாதனை.
நன்றி: க்வாண்டா இதழ்
ஆங்கில மூலம் கிளாடியா டெரிஃபஸ்