என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே!
என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே! இது அதிமுக பற்றிய கட்டுரையல்ல. நமது உடலில் ஓடும் ரத்தம் பற்றியது. ரத்தம் என்றால் என்ன? ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு காரணம், அதிலுள்ள சிவப்பு அணுக்கள் என பள்ளிகளில் படித்தறிந்திருப்போம். கூடவே, அதில் பிளாஸ்மா, வெள்ளை அணுக்கள், பிளாடேட்ஸ் ஆகியவை இருக்கும். உடலிலுள்ள ரத்தத்தை இதயம் பல்வேறு உறுப்புகளுக்கு பிரித்து அனுப்புகிறது. ஊரில் குடிநீரை நீருந்து நிலையம் வைத்து விநியோகம் செய்கிறார்களே அதுபோல... சிவப்பு அணுக்கள், ரத்தத்தை மட்டுமல்ல, அதனோடு உயிர்க்காற்றையும் (ஆக்சிஜனையும்) உடன் கொண்டு செல்கிறது. சிவப்பு அணுக்கள் ரத்தத்தில் உள்ள அளவு 44 சதவீதம். ஒருவரின் உடலில் காயமானால் அங்கு ரத்தம் தடைபடுகிறது. காயமான இடத்தில் ரத்தம் கூழ் போல மாறுகிறது. இதை பிளாடேட்ஸ் செய்வதால் ரத்தப்போக்கு நிற்கிறது. ரத்தம் உறைந்து போதல் என்று இதைக் குறிப்பிடலாம். இதில் ஃபிப்ரின் என்ற புரதத்தின் பங்கும் உள்ளது. பிளாஸ்மா என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா? அதை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்தால் மெல்லிய மஞ்சள் நிறம் கொண்ட நீர் போல இருக்கும். இ...