இடுகைகள்

ஐராவதம் மகாதேவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறம் சார் இதழியல் பணி! - தினமணி 85

படம்
குறுக சொல் நிமிர் கீர்த்தி! ஓர் பத்திரிகை ஏன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, அதன் பெயரைக்கூட வாசகர்கள் சூட்டி பத்திரிகை உருவாகிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தினமணி அப்படித்தான் உருவானது. வளர்ந்த நகரங்களில் இல்லாமல் விழுப்புரம், தருமபுரி போன்ற பகுதிகளில் பத்திரிகை பதிப்புகள் தொடங்கியது முதல் அனைத்தும் புதுமைதான். மத்திய, மாநிலச் செய்திகளை சார்பின்றி வெளியிடும் தன்மை தமிழகத்திற்கு புதியது. தினமணிக்கென்ற தனிக் கொள்கை தலையங்கம் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள். அன்றிலிருந்து இன்றுவரை அதனைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இக்கட்டுரைகளின் நேர்த்தி இன்றும் குறையாமல் இருப்பது ஆசிரியர்களின் கீர்த்தியைச் சொல்லுகிறது.  தினமணி 85  இதழ் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 96 பக்கங்கள். இதுவரை தினமணி இதழில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் நேர்த்தியாக நினைவுகூர்ந்து கட்டுரைகளை செம்மையாக எழுதியுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து தினமணி இதழின் ஆசிரியராக இருப்பவரான கி.வைத்தியநாதன், இதழ் பற்றிய தன் கருத்து இரண்டு பக்கங்களில் எழுதிய