இடுகைகள்

வேலி ஆஃப் லாண்டெர்ன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கைநடுக்கத்தை குறைக்க காலத்தை புதிதாக மீண்டும் தொடங்கினால்... வேலி ஆஃப் லாண்டெர்ன்

படம்
  வேலி ஆஃப் லாண்டெர்ன் அனிமேஷன் ஒரு கிராமம். அந்த கிராமத்தின் சிறப்பு, உயரமாக அமைக்கப்பட்ட இடிபாடுகளைக் கொண்ட கோட்டை. கோட்டை அமைந்துள்ள கிராமத்தில் ஆலிஸ்டைன் என்ற வயதான பெண்மணி, அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோருடன் வசிக்கிறாள். வயதான பாட்டிக்கு பார்க்கின்சன் நோய் வந்துவிடுகிறது. அது பாரம்பரியமாக வரும் குடும்ப நோய். தான் ஆரோக்கியமாக பிறருக்கு பயனுள்ளவளாக இருக்கவேண்டுமென நினைக்கிறாள். எனவே, ஊரில் உள்ள பழங்கதையில் சொல்லும் விஷயத்தை செய்கிறாள். ஆண்டை மாற்றி வைப்பது. இதன்மூலம் மக்களுக்கு ஒரே ஆண்டு திரும்பத் திரும்ப வருகிறது. ஆலிஸ்டைன் பாட்டி, ஆண்டுதோறும் வரும் விளக்கு திருவிழாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த பணத்திற்கு காகித விளக்குகளை செய்து கொடுக்கிறாள். அதை மனதிருப்திக்காக செய்கிறாள். கிடைக்கும் பணம் என்பது செய்யும் உழைப்பிற்கு போதுமானதல்ல. அவளது குடும்பம் பாரம்பரியமாக செய்யும் வேலை அது. ஆனால் பார்க்கின்சனால் ஏற்படும் கைநடுக்கம், விளக்கை ஏற்றுவதற்கு கூட விடுவதில்லை. தடுமாறுகிறாள். ஆலிஸ்டைன் எதற்கு இதை திரும்ப திரும்பச் செய்கிறாள் என்றால், அவளுக்கு கைநடுக்க நோய் திரும்பத்