இடுகைகள்

ஒப்பந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம்@ 60! - ஒப்பந்த வரலாறு, பிரச்னைகள், தீர்வுகள்

படம்
            இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தத்திற்கு வயது 60! கடந்த செப்டம்பர் மாதம் 19 அன்று இந்தியா பாகிஸ்தான் நதிநீர் ஒப்பந்தம் , வெற்றிகரமாக 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே இன்று அரசியல்ரீதியான நிலை , சுமூகமாக இல்லை . ஆனால் அதேசமயம் , இருநாடுகளுக்கு இடையில் உருவான நதிநீர் ஒப்பந்தம் (IWT) பல்வேறு தடைகளைத் தாண்டி 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இதன்மூலம் இருநாடுகளும் மனம் வைத்தால் அமைதியான அரசியல் உறவையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பது உறுதியாகியுள்ளது . இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவுகளையும் கடந்து உலகவங்கி இந்த ஒப்பந்தம் உருவாக பெரும் உதவிகளைச் செய்துள்ளது . எந்த இடையூறுகளுக்கும் உட்படாத , தொந்தரவுகளும் செய்யமுடியாத ஒப்பந்தம் என்று கூறப்படும் பெருமை கொண்டது இந்த நதிநீர் ஒப்பந்தம் . 1947 ஆம் ஆண்டு சிந்து , ஜீலம் , செனம் , சட்லெஜ் , பீஸ் , ரவி ஆகிய நதிகளை இருநாடுகளும் பகிர்ந்து நீர் பெறும் முயற்சிகள் தொடங்கவிட்டன . அப்போது இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலகட்டம் . மேற்கு நதிகள் என்று அழைக

சீனாவுக்கு பயன் கொடுக்கும் மிகப்பெரிய ஒப்பந்தம்!- இந்தியாவுக்கு இடமில்லை

படம்
              டீலா ? நோ டீலா ? உலகின் பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பதினைந்து ஆசிய நாடுகள் கையெழுத்து போட்டுவிட்டன . இதில் சீனா முக்கியப்பங்கு வகிக்கவிருக்கிறது . இதில் இந்தியா இன்றுவரை இணையவில்லை . போட்டுக்கு அஞ்சுகிறதா , அரசியல் முடிவா என்பது இன்னும் தெளிவாக புரியவில்லை . இந்த ஒப்பந்தம் மூலம் 210 கோடி மக்கள் வியாபார வளையத்திற்குள் வருவார்கள் . உலகில் 30 சதவீத உற்பத்தியை பதினைந்து நாடுகள் ஈடுகட்டுகின்றன என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது . 2012 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கூறப்பட்டு இப்போதுதான் நடந்தேறியுள்ளது . பத்து ஆசியன் அமைப்பு நாடுகள் இதில் உள்ளன கூடுதலாக சீனா , ஆஸ்திரேலியா , ஜப்பான் , தென்கொரியா , நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இதில் இணைகின்றன . இந்த ஒப்பந்தப்படி இதில் உள்ள நாடுகளில் எந்த நாட்டிலும் வரி மிகவும் குறைவாக இருக்கும் . அல்லது வரியே இருக்காது . இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பிற நாடுகளில் அதிக அனுமதிகளைப் பெறாமல் தொழில் தொடங்க முடியும் . ஏற்றுமதி செய்யலாம் இறக்குமதியும் கூட செய்யலாம் . கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்

இந்தியா பிராந்திய ஒப்பந்தத்தில் இணைவது நல்லது - அரவிந்த் பனகரியா

படம்
நேர்காணல் அரவிந்த் பனகரியா இந்தியா, பிராந்தி பொருளாதார ஒப்பந்த த்திலிருந்து விலகியுள்ளது. அது பற்றி உங்களது கருத்து? பிரதமர் மோடிதான் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தாரே. நாம் நினைத்த து போல பல்வேறு விதிமுறைகளை மாற்ற வேண்டும். மேலும் இந்தியா இதில் இடம்பெறவில்லை என்பது தற்காலிக முடிவுதான். இந்த ஒப்பந்த த்திலுள்ள பல்வேறு முடிவுகள் மாற்றப்படுவது காலத்தின் கட்டாயமும் கூட. இந்தியா இந்த வர்த்தகத்தில் இடம்பெறும் என திடமாக நம்புகிறீர்கள் போல? இந்த ஒப்பந்த த்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளுக்குள் இலவசமாக அல்லது குறைந்த வரிகளுடன் வணிகம் செய்கின்றன. ஆனால் இந்த முறை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகிறது. அதேசமயம் 300 கோடி மக்களைக் கொண்ட நாடுகளின் ஒப்பந்தம் இது. உலக உற்பத்தியில் 20 சதவீதம் இந்த நாடுகள்தான் கொண்டுள்ளன. இதிலிருந்து வெகுநாட்கள் இந்தியா விலகியும் நிற்கமுடியாது. பிரதமரை அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள்? ஆம். பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் தனது துணிச்சலை நிரூபித்துள்ளார். ஆசிய நாடுகளின் ஒப்பந்தத்தில் இந்தியா நிச்சயம்

பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்னாகும்?

படம்
பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்ன நடக்கும்? பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது உறுதி. இது தாமதமானாலும் நடக்கப்போகிறது. தனிநாடாக நிற்கும் வணிகம் உட்பட அனைத்தையும் இங்கிலாந்து அரசு தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தெரசா மே பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீதம் குறைவாகவே இருக்கும். ஐரோப்பிய யூனியனிலிருந்து கிடைத்து வந்த பொருட்கள் அனைத்தும் இனி கிடைக்காது. இதன் அர்த்தம், இங்கிலாந்து இனி சுங்கவரி அதிகமாக கட்டவேண்டி இருக்கும். இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து 30 சதவீத உணவுப்பொருட்கள் இங்கிலாந்துக்கு வருகின்றன. நன்றி: தி கார்டியன்.காம்