இடுகைகள்

புகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்பிடிப்பதை கைவிடுவது எப்படி?

படம்
  புகைப் பிடிக்காதீர்! மேலே சொன்னது போல அரசு அல்லது தனிநபர் என யார் சொன்னாலும் சங்கடம்தான். ஆனால் புகைப்பிடிப்பது பிரச்னை என அதை பின்பற்றுபவர் நினைத்து கைவிட்டால் தான் உண்டு. இப்போது இதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்போம்.  இந்தியாவில் புகைப்பிடிப்பதை கைவிட நினைப்போரின் அளவு 55 சதவீதம். அதில், சரியான ஆதரவு கிடைக்காமல் புகைப்பிடிப்பதை பலரும் கைவிட முடியாமல் தவிக்கின்றனர். 4 சதவீதம் பேர் தான் மனவலிமையால் புகைப்பிடிப்பதை கைவிட்டு அதன் பக்கவிளைவுகளை எதிர்கொண்டு வெல்கின்றனர்.  புகையிலை தொடர்பாக ஏற்படும் நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 27.5 பில்லியன் டாலர்கள்  புகையிலை பயன்படுத்தி உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். ஏழு சதவீதம் என்று கூறலாம்.  பெருந்தொற்று காலத்தில் மூன்றில் இருவர் அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட முயன்றிருக்கின்றனர். இத்தகவலை ஸ்மோக் ஃப்ரீ வேர்ல்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.  அறிவியல் என்ன சொல்கிறது? நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கௌன்சிலிங், வெரெனிகிலின், பூபுரோப்லான்  என இரு மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்களை காப்பாற்ற முயல்கிற

எஸ்ஓஎஸ் சிக்னல்- ஆபத்தில் உள்ளவர்களை காக்கும் அடையாளம்

படம்
  எஸ்ஓஎஸ் சிக்னல் (SOS Signal) கடலில் அல்லது மலைப்பகுதியில் அவசர நிலையின்போது, ஆபத்தில் உள்ளவர்கள் தீப்பந்தம் ஒன்றை எரிய விடுகிறார்கள். இதனை ஃபிளேர்ஸ் (flares) என்று அழைக்கின்றனர். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு நிறங்களில் எரியும் என்பதால், தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதனைப் பார்க்கலாம். ஆபத்து சமிக்ஞையைப் பார்க்கும் விமானப்படையினர், எளிதாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.  ஃப்ளேர்ஸ், பெரும்பாலும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவிலும் இதனை எளிதாக காணலாம். இதில் சிலவகை ஃபிளேர்ஸ், எரியும்போது புகையை மட்டுமே வெளிவிடும். காடுகளில் இவ்வகையைப் பயன்படுத்துகிறார்கள். வானில் விமானத்திலிருந்து பார்க்கும்போது காடுகளின் பகுதிகளை  துல்லியமாக பார்க்க முடியாது. இச்சமயங்களில், நெருப்பை விட புகையை எளிதாக அடையாளம் காணலாம்.   ஒருவர் கையில் பிடித்து ஃப்ளேர்ஸை எரித்தால் அது 1 நிமிடம் முழுதாக எரியும். அதனை ஐந்து கி.மீ. தூரத்தில் இருப்பவர்கள் பார்க்கலாம்.  ஃப்ளேர்ஸில் உள்ள வேதிப்பொருட்கள் எரியும்போது, ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. இதன் காரணமாகவே அதில் பற்றிவைக்கப்படும்

எதிர்காலத்தில் புகழ்பெறவிருக்கும் ட்ரைவ் இன் விழாக்கள்!

படம்
            ட்ரைவ் இன் விழாக்கள் இங்கிலாந்தில் பெருந்தொற்று காரணமாக ட்ரைவ் இன் விழாக்கள் கொண்டாடப்பட தொடங்கியுள்ளன. ட்ரைவ் இன் விழாக்கள் என்றால், கார்களை விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அதிலிருந்தபடியே விழாவை ரசிப்பது, பரிமாறப்படும் உணவை சாப்பிட்டுவிட்டு அப்படியே காருக்குள் இருந்துவிட்டு பாதுகாப்பாக திரும்பி விடுவது. இதன்மூலம் நோய்த்தொற்று பரவாது. பாதுகாப்பாகவும் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் விழா என்றால் மக்கள் ஒன்றுகூடி பேசுவது என்பது இதில் நடைபெற வாய்ப்பு இல்லை. கார்கள் இயங்கிக்கொண்டே இருந்தால் மாசுபாடு அதிகரிக்கும். விழாவில் நடனம் ஆடுவது கடினம். கார் இல்லாதவர்கள் விழாவுக்கு வரமுடியாது ஆகிய சிக்கல்கள் உள்ளன. பிளஸ் என்றால், உங்கள் இஷ்டம் போல இருக்கலாம். டிஜே பாடல் பிடிக்கவில்லை என்றால், உங்கள் காரில் உள்ள பாடலை இயக்கி ரசிக்கலாம். இவை எல்லாம் பெருந்தொற்று கால வரவு என்பதை புரிந்துகொண்டால் சரி. தி வீக் ஜூனியர்  

புகைத்தால் இறப்பு - சீனா வேபிங் பென்ஸ் காரணமா?

படம்
நிகோடின் கொண்ட இ சிகரெட்டுகள் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளன. இவை அங்கு 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. இன்று பல லட்சம் பேர் இதனை அங்கு புகைத்து வருகின்றனர். இ சிகரெட்டுகளில் நிகோடின் திரவ வடிவில் இருக்கும். பேட்டரி மூலம் அந்த திரவம் மெல்ல புகையாகும். அது சிகரெட் புகைப்பது போன்ற உணர்வைத் தரும். தற்போது இ சிகரெட்டுகளைப் பிடிப்பவர்கள் நுரையீரல் பாதிப்புற்று இறந்து வருகின்றனர். விஸ்கான்சின், இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் ஐந்துபேர் இ சிகரெட் பிடித்து இறந்துள்ளனர். இதனால் அந்தந்த மாநில நிர்வாகங்கள் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று கூறியுள்ளது. 33 மாநிலங்களைச் சேர்ந்த 450 பேர் இசிகரெட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இ சிகரெட்டில் நிகோடின், மரிஜூவானா, டிஹெச்சி, பூச்சிக்கொல்லி, நச்சு ஆகியவை காணப்பட்டுள்ளன. அரசு 140க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து சோதித்து வருகிறது. நிகோடினுடன் விட்டமின் இ அசிட்டேட் சேர்ந்துள்ளது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. புரப்பலைன் கிளைக்கால் மற்றும் கிளிசரால் ஆகியவை விட்டமின் இ அசிட்டேட்டிற்கு அடுத்தபடியாக சந்தே