இடுகைகள்

சிவகங்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கிலம் கற்றலை எளிதாக்கும் செமான்டிக் மேப்பிங்- சிவகங்கை ஆசிரியர் உஷாவின் சாதனை முறை!

படம்
    கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்திய சிவகங்கை ஆசிரியர்!   சிவகங்கையில் உள்ள டயட் மையத்தில் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார் உஷா. இதற்கு முன்னால் அவர் காளையர் கோவிலில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான   மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுத்து வந்தார். இதில் என்ன சாதனை இருக்கிறது என நினைப்பீர்கள். கொரோனா காலத்தில் தான் உஷா மாணவர்கள் கல்வி கற்பதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அதுதான் அவருக்கு மத்திய அரசின் கல்விமுறையில் புதிய கண்டுபிடிப்பிற்கான விருது ஒன்றையும் பெற்றுள்ளார். கொரோனா காலத்தில்தான் பள்ளி மாணவர்களின் கல்வி நேரடியான வகுப்பு இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட் டது. கல்வியை பாதிக்காத வகையில் ஆன்லைன் கல்வி முறை நடைமுறைக்கு வந்தது.ஆனால் இதுவும் அனைத்து     மாணவர்களுக்கான முறையாக இல்லை. நகரில் வாழும் பெற்றோர் ஆண்ட்ராய்ட் போன், டேப்லட் ஆகியவற்றை வைத்து சமாளித்தனர். ஆனால் சாதாரணமாக கூலி வேலைக்கு செல்லும் பெற்றோரைக் கொண்ட பிள்ளைகள் ஆன்லைன் கல்வியில் இணைவது கடினமாக மாறியது. பள்ளிகள் திறந்தபிறகு, பள்ளிக்கு வந்த மாணவர்கள் பலருக்கு ஆங்கில மொழியில் படி

பாரம்பரிய பயிர்களை நடவு செய்யும் விவசாயி!

படம்
  சிவகங்கையில் வாழும் விவசாயியான கண்ணன், அங்குள்ள விவசாயிகளுக்காக அறுவடைத்திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதன் நோக்கமே, பாரம்பரிய நெற்பயிர்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான்.  பொறியாளராக பணியாற்றி வந்த கண்ணன் எப்போது விவசாயி ஆனார், அவர் நடவு குறித்த ஏராளமான விஷயங்களை சொல்வார் என யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று சூழல் அப்படித்தான் இருக்கிறது. விவசாயம் பற்றி நுட்ப நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொண்டதே ஜனவரி 2018லிருந்துதான் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.  சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர், 9 டூ 6 மணி வேலையை விட்டு வருவார் என யாருக்கு தெரியும்? கண்ணனுக்கே சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டார். கண்ணனின் அப்பா காலமானபிறகு, அவரின் தந்தையும் தாத்தாவுமான அழகுகோனார்  கண்ணன் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசைப்படி சென்னையில் செய்து வந்த வேலையைவிட்டு விட்டு அம்மா இந்திரா, தம்பி பாலசுப்பிரமணியத்துடன் கிராமத்திற்கு வந்துவிட்டார் கண்ணன்.  கட்டுமான இயந்திரங்களை இயக்கி பழகியவர் கண்ணன். ஆனால் விவசாய விஷயங்களை