இடுகைகள்

ஃபாரஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொழிலதிபரைத் தாக்கும் மாயவலி, மருத்துவருக்கு ஏற்படும் பதற்றக்குறைபாடு என இரண்டையும் இணைக்கும் காடு! ஃபாரஸ்ட்

படம்
  ஃபாரஸ்ட் - கே டிராமா ஃபாரஸ்ட் தென்கொரியா டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் தென்கொரியாவின் சியோலில் நான்செங் என்ற முதலீட்டு நிறுவனம், ஆர்எல்ஐ என்ற பெருநிறுவனத்தின் பகுதியாக இயங்கி வருகிறது. அதன் தலைவர் காங் சன் சியோக். அவருக்கு பாண்டம் பெயின் என்ற உளவியல் குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டால், அவரது வலது கை தீயால் எரிந்து பொசுங்குவது போல தோன்றுகிறது. நிஜத்தில் கை எரிவது போல வலியால் துடிக்கிறார். அப்போது அவர் மனக்கண்ணில் ஒரு காடு தோன்றுகிறது. அதில் நெருப்பு பற்றுவது போல காட்சிகள் தோன்றுகின்றன. மருத்துவமனையில் பான்டம் பெயின் தோன்றுவதற்கு காரணம், அவரது பால்ய கால பிரச்னைகள்தான். அதை தீர்த்தாலே பிரச்னை தீரும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிற்கு   அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அப்போது தொழில்ரீதியாக அவர் மிர்யாங் எனும் காடு பற்றி அறிகிறார். அங்கு டேசங் எனும் தொழில்நிறுவனம் ரிசார்ட் கட்டவிருப்பதாக அறிகிறார். அந்த திட்டத்தை காங் பெற நினைக்கிறார். தனது நிறுவனத்திடம் அனுமதி பெற்று மிர்யாங் காட்டில் உள்ள தீயணைப்பு துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அதேநேரத்