நடுத்தர குடும்பத்திற்கு வரும் அடுத்தடுத்த பணப்பிரச்னையால் தவறான வழிக்கு இறங்குகிறார்கள். விளைவு?
நாராயணா அண்ட் கோ தெலுங்கு பட்ஜெட் படம். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் பணத்தின் பற்றாக்குறை தெரிகிறது. வங்கியில் காசாளராக உள்ளவர் நாராயணா. கிடைக்கும் வருமானத்தில் மனைவி, இரு பையன்கள் என குடு்ம்பத்தை சமாளித்து வருகிறார். மனைவி பட்டுப்புடவை பைத்தியம். மகன் கிரிக்கெட் சூதாட்ட வெறியன். இளையமகன் செக்ஸ் வெறியன். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னை வராமல் எப்படி இருக்கும்? நாயகனை நல்லவர் என்று கூறிவிட முடியாது. எப்போதும் குறுக்குவழியில் சம்பாதிக்க நினைக்கத் துடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு பத்துலட்சம் கடன்படுகிறார். இத்தனைக்கும் படிப்பு வராமல் வாடகை டாக்சி ஓட்டி வருகிறார். அப்படி வேலை செய்யும் நிலையில் ஓசி பார்ட்டிக்கு சென்று வருகையில் ஒரு பெண்ணோடு கசமுசா செய்துவிடுகிறார். அந்த சமாச்சாரமே அப்பெண் சொல்லித்தான் நாயகனுக்கு தெரிகிறது. அதுவும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதனால் அவரை மணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது. அந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் படம் பெரிதாக முன்னேறவில்லை. நகைச்சுவையும் கை...