இடுகைகள்

டெல்லி கற்பழிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றம் மக்களை உள்ளடக்கியதுதான் - சேட்டன் பகத்!

படம்
மாற்றத்தின் நாயகர்களுக்கு சில வார்த்தைகள் அன்புள்ள நண்பர்களே, டெல்லியில் நடந்த மாணவியின் கற்பழிப்புக்காக இளைஞர்கள்  நீதிகோரி போராடியது முக்கியமான ஜனநாயக அம்சம். அதற்கான நீதி கிடைத்ததா, அதற்கான முனைப்பை அவர்கள் கொண்டிருந்தார்களா என்பதில் வேறு விஷயம்.  காரணம், அதில் அவர்கள் நினைத்ததை அடைந்தார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவனத்தை மக்களிடையே ஏற்படுத்தினர் என்று கூறலாம். ஆனால் இது இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கும் போய் சேர்ந்ததா என்று தெரியவில்லை. இந்தியா ஒற்றுமையான, பன்மைத்துவம் கொண்ட ஒரே நாடு என்பதில் எனக்கு சம்மதமில்லை. இந்தியாவில் நான்கு முக்கிய பிரிவுகள் உண்டு.  அரசியல்வாதிகள் இந்தியாவில் பல்வேறு கொள்கைகளை உருவாக்குகிறார்கள். தங்களது சம்பாத்தியத்தை இரண்டாவது பிரிவினரிடம் கொடுத்து பதுக்குகிறார்கள். நான்காவது பிரிவினரிடமும், மூன்றாவது பிரிவினரிடமும் வரும் கருத்துகளை எதிர்கொள்வது இவர்கள்தான். இரண்டாவது பிரிவினர், தொழிலதிபர்கள். இவர்கள் இயல்பாகவே அரசியல்வாதிகளிடம் நெருக்கம் கொண்டவர்கள். இல்லையெனில் தொழிற்சாலைகளுக்கான அனுமதியை எப்படி பெறு