இடுகைகள்

இந்தியா - வேலைவாய்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையா?

படம்
மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் அண்மையில் பெண்களை பலரும் வேலைகளுக்காக தேர்ந்தெடுப்பதில்லை என வருத்தப்பட்டிருந்தார். உண்மையில் நிலைமை என்ன? 2011-12 ஆம் ஆண்டு தேசிய புள்ளியல் ஆய்வு நிறுவனம்(NSSO) பணியில் பெண்களின் அளவு மிக குறைந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த ஆய்வு கிராமப்புறங்களை ஒதுக்கிவைப்பதாக உள்ளது. 2004-05, 2009-10 ஆகிய ஆண்டுகளில் விவசாய வேலைகள் கடுமையான சிக்கல்களைச் சந்தித்தாலும் பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை பொருளாதார ஆய்வாளர் ஜெயன் போஸ் பதிவு செய்கிறார். 2000 ஆம் ஆண்டை விட 2012 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்பிருந்ததைப் போல பெண்களை யாரும் புறக்கணிக்கவில்லை என்பதற்கு இதுவே சாட்சி. தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியப் பகுதிகளில் பெண்கள் விவசாயம் தவிர்த்த பல்வேறு பணிகளை செய்துவருவது பெருமைக்குரிய செய்தி. மிசோரம்(33%), மேகாலயா(31.7%), தமிழ்நாடு(25%), கர்நாடகம்(24.5%), ஆந்திரம்(23.8%) ஆகிய மாநிலங்கள் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன. விவசாயம் இன்று நிலைகுலைந்தாலும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேலை