இடுகைகள்

வந்தனா சிவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானியங்களின் காந்தி - வந்தனா சிவா!

படம்
      இயற்கை செயல்பாட்டாளர் டாக்டர் வந்தனா சிவா    உலகிற்கே ஆபத்து மான்சான்டோ வடிவில் வருகிறது என்று சொன்ன துணிச்சலான இயற்கை செயல்பாட்டாளர் வந்தனா சிவா. மான்சான்டோவின் தற்போதைய பெயர் பேயர். பெயர் மாறினாலும் இவர்களின் விவசாய பேராசையும், வணிகமய புத்தியும் மாறவில்லை. இதற்கு எதிராக வந்தனா சிவா போராடி வருகிறார். இன்றைய விவசாயத்தில் பெரு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து அதனை வன்முறையாக்கி உள்ளனர் என பேசி வருகிறார்.  வந்தனா சிவா உலக மய கொள்கைகளுக்கு எதிராகவும் உணவு தற்சார்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் வந்தனா சிவா. மரபணு பொறியியல் பற்றிய படிப்பை படித்த வந்தனா சிவா, 1960ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய பசுமை புரட்சி அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்றுவரை தீவிரமாக விமர்சித்தும் அதற்கான தீர்வுகளை முன்வைத்தும் வருகிறார். மரபணுமாற்ற பயிர்களை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார்.  1991ஆம் ஆண்டு நவதான்யா எனும் நிறுவனத்தை தொடங்கினார். இதன் பொருள் ஒன்பது தானியங்கள் என்பதாகும். பெரு நிறுவனங்கள் குறிப்பிட்ட பணப்பயிர்களை மட்டுமே விவசாயிகளை விதைக்க கட்டாயப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலை வேளாண் சூழலை கெடுக்கும்

பெமினா பெண் சாதனையாளர்கள்!

படம்
            பெமினா பெண் சாதனையாளர்கள் ராஜ்ஶ்ரீ பதி ராஜ்ஶ்ரீ குழும நிறுவனங்களில் தலைவர் , இயக்குநர் இவர். இந்தியா டிசைன் பாரம் என்ற நிறுவனத்தையும் பதி தொடங்கியுள்ளார்.  மேலும் ஆயுர்வேதாவில் சொகுசுப் பொருட்களை வாங்குவதற்காக காமா ஆயுர்வேதா என்று நிறுவனத்தையும் இவர் தொடங்கியுள்ளார். ஹார்வர்டில் படித்து பட்டம் பெற்ற பதி, தனது தந்தை திடீரென காலமானதால் குடும்ப தொழிலுக்கு வந்தார். தனது தொழிலுக்கென தனிப்பார்வை கொண்டுள்ள தலைவர் இவர். ஸ்கூபா டைவிங், ஃபேஷன், கலை, ஆயுர்வேதா என பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர் பதி. இவரது தலைமையின் கீழ் ராஜ்ஶ்ரீகுழுமம் சர்க்கரை உற்பத்தியில் சிறப்பான சாதனைகளை படைத்து வருகிறது. பயணம், ஆரோக்கியம், உயிரியல், வடிவமைப்பு சார்ந்த கல்வி என பல்வேறு துறைகளை இக்குழுமம் கொண்டுள்ளது. வந்தனா சிவா இயற்கை மற்றும் மனித உரிமை வட்டாரங்களில் புகழ்பெற்ற நபராக வந்தனா உள்ளார். நவதான்யா எனும் இவரது அமைப்பு இயற்கை விவசாயத்திற்காக வழியை மக்களுக்கு காட்டுகிறது. பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கவும், தாராளமயமாக்கத்தின் பக்கவிளைவுகளை பிரசாரமும் செய்துவருகிறார். கனடாவின் ஒன்டாரியா பல்கலைக்கழகத்தில் இ