மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் அதிகாரம்!
தொழிலாளர் சங்கம் என்பது அடிப்படையில், அதிலுள்ள உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுதான் அதன் இயல்பான கடமையும் கூட. சிலர் சங்கத்தில் சேராமல் இருப்பார்கள். அதற்கு ஆலையின் மிரட்டல் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சங்கத்தின் தலைவர்கள் செய்யும் ஊழல், துரோகம், சங்க செயல்பாட்டில் நேர்மையின்மையே முக்கியமான சிக்கல்கள். போராட்டம் குறிப்பிட்ட துறையில் நடைபெற்றால், அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அப்பகுதி மட்டுமல்ல நாடு முழுக்கவே ஆதரவு தெரிவித்து இயங்கவேண்டும். அதாவது,அவர்களும் வேலைநிறுத்தம் செய்யவேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் வெற்றி பெறும். அரசியல் அதிகாரத்தை முற்றாக ஒருங்கிணைத்து ஒழித்தால்தான் நாம் எதிர்பார்த்த பயன்களைப் பெற முடியும். சர்வாதிகாரம், அடக்குமுறை, அதிகாரம் ஆகியவற்றை இங்கு இப்படிக் குறிப்பிடலாம். சொத்துக்களை உருவாக்குபவர்கள் தொழிலாளர்கள், அவர்கள் கையில் உள்ள பேரளவு பலத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். பியர் ஜோசப் புரவுட்தோன் என்பவர், நவீன மக்கள் அதிகார கருத்தை உருவாக்கியவர். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் உருவான தத்துவங்கள...