ஒலி என்ன செய்யும் தெரியுமா?



Song Drums GIF
giphy.com



சத்தம் என்ன செய்யும் என்பீர்கள். ஆனால் ஸ்லேட்டில் சாக்பீஸ் எழுதும் ஓசை, குழந்தை அழும் ஓசை ஆகியவை காது கூதும் ஓசைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரயிலில் கால் சிக்கும்போதும், குழந்தைகள் பசியில் அழும்போது வீறிட்டு அழுவதையும் நாம் குறை சொல்லப் போவதில்லை. இந்த ஒலிகள் ஏன் நமக்கு காது கூசுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி மட்டுமே நான் பேச வருகிறேன்.

கரண்டியால் பீங்கான் டம்ளர்களில் மோதுவது மோசமான ஒலிகளில் ஒன்று. நம் காதுகளின் அமைப்பு குறிப்பிட்ட ஒழுங்கமைந்த ஒலிகளுக்கு பழகிவிடுகிறது. ஆனால் திடீரென ஒழுங்கற்ற ஏற்படும் விபத்து, கட்டிட உடைப்பு போன்ற ஒலிகளுக்கு காதுகள் இன்னும் பழக்கப்படவில்லை. காதுகளின் ஒலிஅளவுத் திறன் 2000 ஹெர்ட்ஸ் முதல் 4000 ஹெர்ட்ஸ்கள் வரை.

பொதுவாக ஒலிகளை நீங்கள் கண்டுகொண்டாலும், பரவாயில்லை என சகித்துக்கொண்டாலும் அவை உளநிலையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. பதற்றம், எரிச்சல், நிதானமிழப்பு, தூக்கமின்மை ஆகியவற்றை ஒளியை விட ஒலி எளிதில் ஏற்படுத்திவிடும். 2012 ஆம் ஆண்டு இதுபற்றி செய்த ஆய்வில் 74பேர் பங்கேற்றனர். இதில் பல்வேறு வித ஒலிகளை எழுப்பினர். அதைக் கேட்கும்போது, அவர்களுக்கு மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளை அறிய FMRI சோதனை நடத்தப்பட்டது. மகிழ்ச்சியான ஒலி கேட்கும்போது, மூளையில் நடக்கும் மின்தூண்டலும், மோசமான ஒலி கேட்கும்போது நடக்கும் ஒலியும் நிறைய மாறுபடுகின்றன.

எனவே முடிந்தவரை காது கூசும் ஒலிகளை கேட்பதை தவிர்க்க முயற்சியுங்கள். அதுவே காதுக்கும் உடலுக்கும் நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும்.


நன்றி - லிவ் சயின்ஸ்



பிரபலமான இடுகைகள்