வாழ்நாள் சாதனையாளர் - ஷிவ் நாடார், ஹெச்சிஎல்!
தற்போது 74 வயதாகும் ஷிவ் நாடார் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவரது பெயரை விட ஹெச்சிஎல் கணினிகள் என்றால் உங்களுக்கு எளிதாக விளங்கும். ஹெச்சிஎல் நிறுவனத்தை 1976ஆம் ஆண்டு தொடங்கியவர் ஷிவ் நாடார். இன்று தொழில்நுட்ப நிறுவனங்களோடு பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
ஹெச்சிஎல் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8.6 பில்லியன் டாலர்கள். அண்மையில் கூட ஆறு மென்பொருட்களுக்கான காப்புரிமையை ஐபிஎம் நிறுவனத்திற்கு விற்று 1.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை முடித்துள்ளார். நொய்டாவில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் 14 மாடி மைய அலுவலகம் உள்ளது. ”நாங்கள் இன்று சாதித்துள்ளதாக நீங்கள் கருதினால் அதற்கு பின்னால் கடுமையான உழைப்பு உள்ளது ” என புன்னகையுடன் பேசினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை ஃபோர்ப்ஸ் இதழ் தேர்வாளர்கள் மூலம் தேர்ந்தெடுத்து வழங்குகிறது. ஹெச்சிஎல் நிறுவனம் , மேலாண்மை நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று ஆட்களை தேர்ந்தெடுக்கிறது. இதனால் இன்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களாவே இருப்பார்கள். தற்போது கல்வி சார்ந்த பல்வேறு பணிகளை ஷிவ் நாடார் செய்து வருகின்றனர்.
ஹெச்சிஎல் பவுண்டேஷன், மற்றும் ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் முக்கியமான பல்வேறு தொண்டுப்பணிகளைச் செய்து வருகிறது.
நன்றி - ஃபோர்ப்ஸ் இதழ்