மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வளர்ப்பு பிராணிகள்!
மிஸ்டர் ரோனி
நாய், பூனை ஆகியவை உணவுக்காகத்தான் நம்மை சார்ந்துள்ளதா?
மனிதர்கள் நாய், பூனைகள் வாழ்வதற்கான இடங்களை அழித்துவிட்டார்கள். பின் அவை எங்கே ஏர்பிஎன்பியில் அறை புக் செய்தா வாழ முடியும்? எனவே அவை மனிதர்களை தாஜா செய்தே சந்தோஷமாக வாழ்கின்றன. இயல்பாகவே வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பவர்கள் மனிதர்கள் மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த வகையில் முதியவர்களுக்கும் சிறிதேனும் வாழ்வு மீது நம்பிக்கை இருக்க வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை ஆகியவை உதவுகின்றன.
காவல், பூனையைத்துரத்த என்பதெல்லாம் மாறி அதிக காலமாகிவிட்டது. இன்று நாய்களை தன் நண்பர்கள் போலவே மனிதர்கள் கருதுகிறார்கள். பரிவோடு நடத்துகிறார்கள். இவை மனிதர்களுக்கு மிகச்சிறந்த நண்பன் என்பதோடு, அடிமையாகவும் இருப்பதால் எதையாவது கட்டுப்படுத்த நினைக்கும் மனிதர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதனால் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது. இந்த தன்மை அவர்களின் வாழ்நாளை அதிகரிக்கவும் உதவும் என்கிறது மேற்குலகின் ஆராய்ச்சி.
இயற்கையில் எதையும் தனியுடையாக பார்க்காதீர்கள். இயற்கையிலிருந்து நம்முடைய திறன் மூலம் உணவைப் பெற்றாலும் பகிர்ந்து உண்ணுவதே சிறப்பு. வீட்டில் வளர்ப்பு பிராணிகள் மட்டுமல்ல பறவைகள் வந்து உட்கார சிறு மரங்கள, செடிகள் இருப்பதும் நல்லதுதான்.
நன்றி - பிபிசி