சோதா பயல்கள் ஹீரோ ஆகும் கதை - தி அதர் கைஸ்!
தி அதர் கைஸ்
இயக்கம் - ஆடம் மேக்கே
ஒளிப்பதிவு - ஆலிவர் வுட்
இசை - ஜான் பிரியன்
சாகச வீர ர்களாக சிலர் ஆபீசில் இருப்பார்கள். சிலர் வாய்ப்பே இன்றி டெஸ்கில் சிஸ்டன் தட்டிக்கொண்டு இருப்பார்கள். இந்த இரு பிரிவுக்கும் இடையே சண்டை வந்தால் என்னாகும்?
ஆலன்,டெடி என்ற இருவருமே சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களுக்கு உள்ளாகி டெஸ்கில் டாக்குமெண்டுகளை தட்டி வருகின்றனர். இதனால் சக ஆபீஸ் வாசிகள் கடுமையாக கிண்டல் செய்கின்றனர். இதனால் எரிமலை ஆகும் டெரி, ஆலனை தன் சகாவாக இணைத்துக்கொண்டு முதலீடு தொடர்பான வழக்கு ஒன்றை துப்பறிவு செய்ய இறங்குகிறார். இதில் நடக்கும் காமெடி களேபரங்கள்தான் கதை.
வில் ஃபெரல் படத்தின் நாயகன். கிளாமரான மனைவியை வைத்துக்கொண்டு தன் நண்பன் அவளோடு நட்புகொள்வதை தடுப்பது, முன்னாள் காதலியின் கோபத்தை சமாளிப்பது, திடீரென கிளம்பும் அசாதாரண கோபம், கல்லூரி வாழ்க்கையில் மாணிக் பாட்சாவாக பெண்களை எப்படி கையாண்டார், தொழில் செய்தார் என சொல்லும் போர்ஷன்கள் என சிரிப்பை வாரி இறைக்கிறார்.
மார்க வால்பர்க், இவருக்கு சரியான ஜோடி. நிறைய இடங்களில் கோப ப்பட்டு அதனால் துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகி அவதிப்படும் நிலையில் இருப்பவர். இவருக்கும் ஆலன் - வில் ஃபெரலுக்குமான நட்பே கிழக்கும் மேற்கும் போல. எப்படி இவர்கள் ஒன்றுபட்டு தில்லுமுல்லு செய்யும் முதலீட்டாளரை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே கதை. காமெடி போராடித்தால் கவர்ச்சிக்கு ஈவா மெண்டிஸ் நிறைந்த நெஞ்சோடு வந்துவிடுகிறார். அதிலும் இருவரும் எப்படி சந்தித்து காதல் செய்தார்கள் என்று சொல்லும் காட்சி இருக்கிறதே? அப்பா... காதல் என்றால் இதல்லவா காதல்......
செக்ஸ், இரட்டை அர்த்த காமெடி, நேரடி அர்த்த வசனம் என படத்தில் அனைத்துமே உண்டு. அதனால் ஏ என பயப்படாமல் பார்க்கலாம். வில் ஃபெரல் உங்களை மகிழ்விப்பார்.
கோமாளிமேடை டீம்