திகட்ட திகட்ட கொலை - இரு சகோதரர்களின் அட்டூழியம்!






அசுரகுலம்

கென்னத் பியான்ச்சி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மலையில் திடீரென 12 முதல் 28 வயதுள்ள பெண்களின் பிணங்கள் கண்டெடுக்கப்படத் தொடங்கின. இருவர் இக்கொலைகளுக்கு காரணம் என போலீஸ் கண்டுபிடித்தது. அதில் ஒருவர்தான் கென்னத். 


Victims Composite


மேற்சொன்ன மலையருகே நிறைய பெண்களின் பிணங்களை காவல்துறை கர்மசிரத்தையாக எடுத்து மார்ச்சுவரியில் அடுக்கியது. பின்னர் கிடைத்த விஷயங்களை வைத்து ஆராய்ந்தபோது, பெண்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு குறிப்பாக வல்லுறவுக்கு பின்னரே கொல்லப்பட்டிருந்தனர். 

அங்கு செய்த கொலைகளைக் காட்டிக் கொடுத்து போலீஸ் விசாரணை செய்ய விசில் ஊதியவன் ஓர் சிறுவன்தான். அவன் அந்த இடத்திற்கு புதையல் கண்டுபிடிப்போம் என்ற விளையாட்டிற்காக வந்தான். அங்கு வந்தபின்தான், அவனது பதினான்கு வயதிற்கு ஒத்த இரு சிறுமிகள் நிர்வாணமாக கட்டிவைக்கப்பட்டிருப்பதை பார்த்தான். அருகில் போய் பார்த்தபோது, இருவரின் உடலின் சதைகளும் கெட்டு புழுக்கள் வெளிவந்துகொண்டிருப்பதை பார்த்து திகைத்துப் போனான். பின்னர் இக்காரியத்தை செய்த இருவரையும் போலீசில் காட்டிக்கொடுத்தான். 

கென்னத், அவரது சகோதரர் ஏஞ்சலோ பியூனோவுடன் சேர்ந்தபிறகுதான் இருவரும் கொலைகளைச் செய்தனர். பியூனோ, பலமுறை திருமணம் செய்து தோல்வி அடைந்தவர். காரணம், மனைவியை காட்டுத்தனமாக தாக்குவது, திட்டுவது என்று இருந்தால் யார் அவருடன் வாழ்வார்கள்? 

கென்னத், பியூனோ இருவரும் ஒன்று சேர்ந்து வீட்டில் வாழ்ந்தனர். பியூனோ தன் வன்முறையான கருத்துகளை கென்னத்திடம் பகிர்ந்து அவரை தன் சிஷ்யப்பிள்ளையாக மாற்றினார். இதன்விளைவாக முதல் திட்டமாக இருபெண்களை கடத்தி வந்தனர். அவர்களை வல்லுறவு செய்தனர். அடித்தனர். பின்னர், டூஃபேன்டசி காமிக்ஸ் போல அவர்களின் படங்களைக் காட்டி, விபசாரம் செய்யும் தொழிலைத் தொடங்கினர். 


அப்பெண்கள் இருவரும் பிரம்ம பிரயத்தனப்பட்டு அங்கிருந்து தப்பினர். பின்னர் அவர்களின் வழக்கும் கென்னத், பியூனோவுக்கு எதிராக மாறியது பின்னாளைய கதை. இரு பெண்கள் தப்பித்து போனது இரு முரடர்களின் மனதிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. பின்னர் அது வன்ம மாக மாற விலைமாது ஒருவரைப் பிடித்தனர். டெபரா நோபல் என்ற அந்தப் பெண்ணுக்கு காசு கொடுத்து விலைமாதுக்களின் முகவரிகளை வாங்கினர். அப்புறம்தான் வேட்டை தொடங்கியது. 

யோலண்டா வாஷிங்டன் என்ற பெண்ணை வல்லுறவு செய்து கொன்றனர். அவரின் நிர்வாணமான உடலை வென்சுரா ஃப்ரீவே அருகில் போட்டுவிட்டு சென்றனர். அதில் எந்த அடையாளமும் தெரியக்கூடாது என தண்ணீர் ஊற்றி உடலை கழுவியிருந்தனர். இந்த கடத்தலை போலீஸ் உடையில் செய்தனர். இதைமட்டுமல்ல பல்வேறு கடத்தலுக்கு போலீஸ் உடைகளை இச்சகோதர ர்கள் பயன்படுத்தினர். 

பின்னர் 12 வயது விலைமாது, ஹோட்டல் வெயிட்ரஸ் என இருவரைக் கொன்றனர். அதற்குப்பிறகு கிம்பர்லி என்ற விலைமாதைக் கொன்றனர்.இந்த பெண்ணை விலைமாதுக்களுக்கான ஏஜென்சியிலிருந்து இவர்கள் பெற்றனர். 

இச்சமயங்களில் இருவரின் கொல்லும் முறையும் மாறி இருந்தது. கிறிஸ்டினா என்ற பெண்ணை வல்லுறவு செய்து கொன்றனர். கூடுதலாக, அப்பெண்ணின் உடலில் தரையை உடைக்க உதவும் லிக்யூட்களை செலுத்தி சோதனை செய்திருந்தனர். இதில் கென்னத்திற்கு லாஸ் ஏஞ்சல்சில் காதலியும் இருந்தார். அவர் கென்னத்தின் திருமண கோரிக்கையை திடமாக மறுத்தார். ஆனால் அதன் நோக்கத்தை புரிந்துகொண்டு ஆண் குழந்தையை பெற்று தந்துவிட்டு குட்பை சொல்லிவிட்டார். 

அதற்கு பிறகு இரு கல்லூரி மாணவிகளை கென்னத் தனியாக கொன்றார். ஆனால் பியூனோவின் ஆதரவின்றி நடந்த கொலைகள் அல்லவா? தடயங்களை விட்டு அடுத்த நாளே மாட்டிக்கொண்டார். 

கென்னத் அனைத்து கொலைகளை ஏற்றாலும், பியூனோவுக்கு வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கென்னத்திற்கு ஆறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பியூனோ 2002இல் சிறையில் இருந்தபோதே இறந்துபோனார். கென்னத், மீண்டும் ஓர் திருமணம் செய்துகொண்டு சிறையில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு பிணை வாய்ப்பும் வழங்கப்படவில்லை. 

நன்றி - கில்லர்ஸ் நூல்

ஆல்தட் இன்டரஸ்டிங் வலைத்தளம்.