உட்கார்ந்து வேலை செய்தால் வயதாகுமா? ஏன்?



மிஸ்டர் ரோனி





neil patrick harris hello GIF by bubly
giphy.com



நாற்காலியில் உட்கார்ந்தே இருந்தால் நோய் வருமா?

இன்று பல்வேறு வேலைகளை உட்கார்ந்தே செய்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. பஸ் ட்ரைவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் உட்கார்ந்து வண்டி ஓட்டாவிட்டால் நாம் எங்கேயும் போகமுடியாது. கால்சென்டர். ஐடி வேலைகள் என பல்வேறு இடங்களிலும் கூட உட்கார்ந்து வேலை செய்வது முக்கியம்.

இங்கிலாந்தில் செய்த ஆய்வுப்படி உட்கார்ந்து வண்டி ஓட்டும் ஓட்டுநர்களுக்கு பெருமளவில் மாரடைப்பு ஏற்படுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது நின்றுகொண்டே இருக்கும் நடத்துநர்களை விட அதிகம்.

அவர்கள் மட்டுமல்ல மேற்சொன்ன பல்வேறு பணிகளில் உட்கார்ந்துகொண்டு ஏழுமணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் இதய நோய்கள், டிமென்ஷியா, நீரிழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பிரச்னை எங்கிருந்து தொடங்கும் தெரியுமா? தோள்பட்டை, முதுகெலும்பு என தசைகள் வலுவிழக்கத் தொடங்கும். பின்னர் மெல்ல அந்த இடங்களில் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதன்விளைவாக எலும்புகள் வலுவிழந்து நம் உடல் மெல்ல நோய்களை நோக்கிச் செல்லும். விரைவில் வயதாவதும் இப்படித்தான் நடக்கும்.

நன்றி - பிபிசி