புதிய டெக்ஸின் அதிரடி! - புதிய கதைக்களம் - புதிய முகம்!




segio bonelli




ஒரு தலைவன் ஒரு சகாப்தம்

லயன் காமிக்ஸ் - தீபாவளி மலர்

விலை. ரூ. 150


ப்ளூமூன் எனும் கமான்சே குழுக்கள், நவஹோ எனும் தங்களின் எதிரியான பழங்குடிகளை தாக்கி கொன்றுவிடுகின்றனர். அங்கு அடைக்கலமாகி வந்த பெண் ஒருவரையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர். அவர்களை வேரறுக்க டெக்ஸ் வில்லர் செல்கிறார். நீதியை நிலைநாட்டி அவர்களை இடதுகையால் சமாளித்து தோட்டாக்களையும் கோடாரிகளையும் பரிசளித்து, குருதியால் பூமியை குளிப்பாட்டுகிறார். இறுதியில் ப்ளூமூனோடு ஒற்றைக்கு ஒற்றையாக மோதி வென்று தன் சவாலில் சாதிக்கிறார். எப்படி என்பதுதான் காமிக்ஸின் கதை.


கதை தொடங்குவதும் முடிவதும் செம ட்விஸ்ட். கதையை சொல்வது டெக்ஸ் வில்லரின் ஆயுள்கால சகாவான கார்சன். ஏறத்தாழ நினைவிழப்பு நோய்க்கு ஆளாகியது போல உள்ள கார்சன், தனது நண்பரின் கதையை சொல்கிறார். நண்பர்தான் டெக்ஸ் வில்லர். இக்கதையில் டெக்ஸ் வில்லர் சற்று வேறுபட்டு தோன்றுகிறார். இதுவரையில் நாம் பார்த்த டெக்ஸ் வில்லர் இவர் கிடையாது.







அழகாய் ஒரு அதிரடி


ரேஞ்சர்களில் ஒருவரான ஜாரியூ என்பவர் சக ரேஞ்சர்களால் முதுகில் சுடப்பட்டு கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்கப்புறப்படும் அவரது மகள்தான் இதில் நாயகி. அவள், கேப்டன் ஷான்னான் என்னும் நயவஞ்சகனை தேடி வருகிறாள். கூடவே துணையாக டெக்ஸ் வில்லர் அவரது சிறைச்சாலை நண்பர் சாம் என பயணம் தொடர்கிறது. அவர்கள் எப்படி கார்சன் உதவியுடன் திட்டம் போட்டு ஷான்னான் மற்றும் அவரது சகாக்களை போட்டுத்தள்ளுகிறார்கள் என்பதே கதை.


இதில் ஓவியரின் தூரிகை காட்டிய மாயத்தில் யார் டெக்ஸ் வில்லர், யார் வில்லன் என்பதே தெரியவில்லை. வித்தியாசமான ஓவிய ஸ்டைலை ஓவியர்கள் முயற்சித்திருக்கிறார்கள். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் குளோசப் காட்சிகள் சரியாக அமையவில்லை. ஏனோதானவென்ற ஸ்டைலில் இருக்கிறதுபோல உள்ளது. அதாவது டீட்டெய்ல் மிஸ் ஆகிறது. தீபாவளி கொண்டாட்டத்திற்கு டெக்ஸ் காமிக்ஸ் உண்மையில் நன்றாகவே வந்திருக்கிறது. புதுமைதான் இதன் பலம்.

கோமாளிமேடை