கரு உருவாவது தாய்க்கு தெரியாமல் இருக்குமா?





Woman GIF





மிஸ்டர் ரோனி

கர்ப்பிணியாக இருப்பது ஒருவருக்கு தெரியாமல் போக வாய்ப்புண்டா?


கிரிப்டிக் என்று குறிப்பிடப்படும் இந்த நிலைமை மிகவும் அரிது. ஐநூறில் ஒன்று என்ற அளவுக்கு  கரு உருவாவது பெண்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எப்படி உடலில் கரு உண்டாவது பெண்களுக்கு தெரியாமல் போகும்? கரு உண்டாகும் தொடக்கத்தில் பிறப்புறுப்பில் சிறிது ரத்தம் வடியும். அதனை மாதவிடாய் என பெண்கள் நினைத்து கம்மென்று இருந்துவிடுவதுதான் காரணம்.

ஹெச்சிஜி எனும் ஹியூமன் கோரினோக் கொனாட்ரோபின் ஹார்மோனில் ஏற்படும் பாதிப்புகளாலும் பெண்களுக்கு உடல் மாறுபாடுகள் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. கரு உருவானாலும் உடனடியாக அவர்களால் கண்டுபிடிக்காமல் அதன் மீது சந்தேகப்படாமல் இருக்க முடிகிறது.

நன்றி - பிபிசி