தேநீர் தயாரிக்கப்படுவதில்தான் சிறப்பு இருக்கிறது!
டீ குடிப்பது இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் மிகவும் பிரபலம். கோடிப்பேருக்கு மேல் அங்கு டீ குடித்து மகிழ்கின்றனர்.முன்னர் இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியாவிலும டீ குடிப்பதற்கு பெரும் மவுசு உண்டு.
டீயில் பெரும்பாலும் தேயிலையையின் துவர்ப்புக்காக அதனை மேட்ச் செய்த பால் ஊற்றி குடிக்கின்றனர். இன்று பிளாக் டீ குடிப்பது ஃபேஷனாகி வருகிறது. இதோடு ஸ்பெஷல் டீ, லெமன் டீ என நிறைய வகைகள் உருவாகிவிட்டன. குறிப்பாக சாய்கிங் போன்ற ஸ்டார்ட் அப்கள் டீயின் தரத்தையும் விலையையும் காபிக்கு நிகராக கொண்டு வந்து விட்டனர்.
டீயில் என்ன முக்கியம்? நன்கு உலர வைக்கப்பட்டு அரைத்த தேயிலை. அதில்தான் வொய்ட் டீ, பிளாக் டீ, ஊலங் டீ, புவெர் டீ ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவது டஸ்ட் டீ ரகம். இது தேயிலையில் மூன்றாவது தரம். முதல் தரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கிலாந்தில் டீ, பால் சேர்க்காமல் அருந்தப்படுகிறது. கிழக்காசியாவில் க்ரீன் மிகவும் பிரபலமாக உள்ளது. கேமெலியா சினென்சிஸ் என்ற தாவரத்திலிருந்து தேயிலை பறிக்கப்பட்டு டீ தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் அசாமிகா ரக தேயிலை பிரபலமாக உள்ளது.
நன்றி - பிபிசி