வைரத்தின் முடிவு - கிரிஸ்டல் காலம் தொடங்கிவிட்டது!

after the final rose abc GIF by The Bachelor


திருமண மோதிரங்கள் என்பது அன்பைச் சொல்லுவது.. முன்பு ஆண்கள் பெண்களுக்கு போட்டார்கள். இன்று சாஹோ படத்தில் ஸ்ரத்தா, பிரபாசுக்கு மோதிரம் போட்டு காதல் - கல்யாணம் - ஹனிமூனை கன்ஃபார்ம் வரை செட் செய்வார். நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கிறது. இதனை தொடங்கி வைத்தார் யார் என்று அறிந்தால்தானே நம் கட்டை வேகும். அதற்காகத்தான் இந்தப் பதிவு. 


நூற்றாண்டுகளுக்கு மேலாக வைரம் திருமணத்தை உறுதி செய்வதற்காக பயன்பட்டு வருகிறது. முதலில் வைரத்திற்கு இந்தளவு மதிப்பு கிடையாது. இல்லையென்றால் என்ன அர்த்தம் உருவாக்கவேண்டும் என்பதுதானே? அப்படித்தான் டீ பீர்ஸ் நிறுவனம் வைரத்தை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தி கலாசாரத்தையே மாற்றியது. 


இரு இதயங்களை இணைக்கும் பந்தம் என்று எழுதி மக்களை கல்யாணம் செய்யத் தூண்டிய விளம்பர எழுத்தாளர்  பிரான்சிஸ் ஜெரார்டி,  கல்யாணமே செய்துகொள்ளவில்லை. ஆனால் மில்லினிய ஆட்கள் உள்ளே வந்த தும் அனைத்தும் மாறியது. இவர்கள் அழகிய கிரிஸ்டல் கற்களை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். இதனால் இப்போது வைரத்திற்கு பெரிய மதிப்பில்லை. பச்சை, ரோஸ் என பல்வேறு நிறம் கொண்ட கற்களைத் தேர்ந்தெடுத்து வருங்கால மனைவிகளுக்கு பரிசளித்து மணமுடித்து வருகின்றனர். 

நன்றி - க்வார்ட்ஸ் 






பிரபலமான இடுகைகள்