ஷேரிங் செய்வோம் மச்சான்ஸ்! - பகிர்தல் பொருளாதாரம்!





neil patrick harris work GIF by bubly
giphy.com




பகிர்தல் என்பது எப்போதும் சிறந்த துதான். இன்று பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் சிறப்பங்காடி முதற்கொண்டு தேவைப்படும் பொருட்களைத் தவிர பிற பொருட்களை யாரும் வாங்க விரும்பவில்லை. புது பொருட்களை மக்கள் கண்கள் விரியப் பார்க்கிறராகளே தவிர பர்சை எடுத்து பொருட்களை வாங்க விரும்புவதில்லை.

இந்த மனநிலை மாற்றம் அனைத்து விஷயங்களிலும் உள்ளது. உதாரணத்திற்கு ஆபீஸ் திறக்கிறார் என்றால், தனியாக வாடகைக்கு இடம்பிடிப்பதை விட கோ வொர்க்கிங் முறை எனும் முறையைத்தான் இன்று பலரும் விரும்புகின்றனர். ஆபீசுக்குத் தேவையான கணினிகள், நாற்காலிகள், ஏசி, ஏன் குடைகளைக் கூட வாடகைக்கு வாங்கலாம்.

இன்று கார் வாங்காமல் ஊபர், ஓலாவில் செல்கிறார்களே அதேபோல்தான்.

ஃபர்லென்கோ, சிட்டி ஃபர்னிஷ் ஆகிய நிறுவனங்கள் நாற்காலிகளை, மேசை ஆகிய பொருட்களை வாடகைக்கு அளிக்கின்றன. நெஸ்ட் அவே என்ற கம்பெனி, பல்வேறு வீடுகளை வாடகைக்கு அளிக்கிறது. இது அனைவருக்கும் விருப்பமான வழிமுறை என்று கூற முடியாது. முப்பது வயதுக்கு கீழுள்ளவர்கள்தான் இம்முறையை உலகெங்கும் பிரபலப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இவர்களின் சதவீதம் 51%.

உலகெங்கும் பகிர்தல் பொருளாதாரம் 275 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்தியாவில் 25 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதனை எப்படி புரிந்துகொள்வது என்றால், இன்றைய மில்லினிய இளைஞர்கள் நிறைய விஷயங்களை சாப்பிடுகிறார்கள், அனுபவிக்கிறார்கள். ஆனால் அவற்றை சொந்தமாக வைத்திருப்பதில்லை.

பொருட்களை எதற்கு பகிர்ந்துகொள்கிறார்கள்?

காசு குறைவு

மாத சந்தா அடிப்படையில் வெரைட்டியான பொருட்களை வாங்கிப் பயன்படுத்த முடியும்.

பொருட்கள் குறைவாக வாழ்க்கையை நிறைவாக வாழும் எண்ணம் அதிகரித்துள்ளது.

முக்கியக் காரணம், வேலை வாய்ப்புகள் நிரந்தரமாக இருப்பதில்லை. எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைத்தால் சென்று வரலாம். பொருட்களை சொந்தமாக வைத்திருந்தால் அவற்றைத் தூக்கிக்கொண்டு அலைய முடியாதே!

நன்றி - இடி மேகசின்