இடுகைகள்

அனு ராமசாமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா, சீனா ஆகிய நாடுகளில்தான் நகரமயமாதல் வேகம்பிடிக்கும்! - அனு ராமசாமி பொறியாளர்

படம்
              பொறியாளர் அனு ராமசாமி நகரமயமாதல் மக்கள்தொகைக்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள் . இதுபற்றிய தங்களது கருத்து ? பலரும் நகரங்கள் உருவாவதை எதிர்மறையாகவே கருதுகிறார்கள் . இப்படி நகரங்கள் உருவாகி வளர்ச்சி பெறுவதை நான் வளர்ச்சியின் அடையாளமாகவே கருதுகிறேன் . உலகில் தொண்ணூறு சதவீத செல்வம் நகரங்களிலிருந்துதான் கிடைக்கிறது . இப்படி பெறப்படும் செல்வம் விநியோகிக்கப்படுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று கூறலாம் . நகரங்களில் இன்னும் சில பிரச்னைகள் உள்ளன . குற்றச்செயல்கள் கூடுவது , காற்று மாசு அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம் . எனவே இப்போது நீங்கள் கேள்வியை நகரமயமாக்கல் தவறு என்று கேட்க கூடாது . அதனை எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் செய்வது ? அங்கு வாழும் மக்கள் நலமுடன் வாழ என்ன செய்யலாம் என்பதாகவே இருக்கவேண்டும் .    சூழலுக்கு உகந்த நகரமயமாக்கல் என்று கூறுகிறீர்கள் . இதைப்பற்றி விளக்குங்களேன் . மனிதர்கள் கட்டும் கட்டிடங்களில் எந்தளவு ஆற்றல் செலவாகிறது , அதனைக் கட்ட எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகிறோம் , மக்களின் விருப்பம் , அரசின் கொள்கைகள்