இடுகைகள்

உண்ணாவிரதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இடைவேளை விட்டுத் தொடரும் உண்ணாவிரதம் - உடல் எடையை கணிசமாக குறைக்கிறது!

படம்
  உடல் எடையைக் குறைக்கும் உண்ணாவிரதம் ஒருவர் மூன்று வேளை உணவு உண்டாலும் மாதம் ஒருமுறை மூன்று வேளை உணவுகளில் ஒருவேளையை தியாகம் செய்து உண்ணாவிரதம் கடைபிடிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பயன்கள், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறுவது, அடுத்து உடலின் செரிமான மண்டலம் சீராவது. ஒருவர் முழுநாளும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது சற்று கடுமையானது. அதற்கென பயிற்சி செய்து அதைக் கடைபிடிக்கலாம். இன்டர்மிட்டர் ஃபாஸ்ட் எனப்படும் உண்ணாவிரதம் பதினாறு மணிநேரம் தொடங்கி சில நாட்கள் வரை நீள்கிறது. இதில் உணவு என்பது முழுமையாக நீக்கப்படுவதில்லை. அதற்குப் பதில் திரவ ஆகாரங்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம். பிறகு உண்ணாவிரதத்தைத் தொடரலாம். மூன்று வேளை உணவுண்டு பழகியவர்களுக்கு இந்த முறை ஏற்றது.   அமெரிக்கர்கள் மத்தியில் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் தீவிரமாகி வருகிறது. வெறுமனே டிரெண்டிங் என்பதாக அல்ல. அதில் பயனும் கிடைக்கிறது. எந்த டயட்டைக் கடைபிடித்தாலும் இடைவேளை விட்டுத் தொடரும்  உண்ணாவிரதம் மூலம் அவர்களுக்கு எடை குறைகிறது என்று கூறுகிறார்கள்.  நீரிழிவு நோயாளிகளுக்கும் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் உதவுகிறது ...

அணைகளை எதிர்த்துப் போராடும் இயற்கை போராளி மேதா பட்கர்!

படம்
    இயற்கை செயல்பாட்டாளர் மேதா பட்கர் மேதா பட்கரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இயற்கை சார்ந்த இதழ்களில் இவரைப் பற்றி அதிகம் வந்திருக்கும். நர்மதா நதியில் கட்டப்படும் அணைகளை தடுத்து போராட்டங்களை நடத்திய வகையில் உலகம் முழுக்க பிரபலமானார். நர்மதா பச்சா அந்தோலன் எனும் அமைப்பை கட்டமைத்து அணையால் ஏற்படும் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தினார்.  இயற்கைப் போராளி மேதா பட்கர் சர்தார் சரோவர் எனும் அணையைக் கட்டக்கூடாது என 22 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய உறுதியான மனம் கொண்டவர் மேதா பட்கர். இந்த போராட்டங்கள் கூட 32 ஆண்டுகள் கள ஆய்வுகள், விவாதங்களுக்கு பிறகே நடைபெற்ற ஒன்று. டாடாவின் சமூக அறிவியல் கழகத்தில் சமூகப் பணி படிப்பில் எம்.ஏ படித்தவர் மேதா. மும்பையில் வாழும் குடிசைவாசிகளுக்கான வீடு கோருதல், ஆந்திராவில் கோவ்வாடா அணு உலை திட்டத்திற்கு எதிர்ப்பு, ஆக்கிரப்பு வீடுகளுக்கு எதிர்ப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கங்களில் அரசியல்வாதிகள் இருப்பதற்கு எதிர்ப்பு என மேதா பட்கர் ஏராளமான பிரச்னைகளுக்கு போராடியுள்ளார்.    சாதி, மதவாதம் மக்களுக்...

தலித் மாணவர்களுக்கான வசதிகளை செய்துகொடுக்காமல் அவர்களை அலைகழித்தனர்! - தீபா மோகனன், முனைவர் படிப்பு மாணவி

படம்
  தீபா மோகனன்   1035 × 1180     தீபா மோகனன் கேரளாவின் கோட்டயத்திலுள்ளது , காந்தி பல்கலைக்கழகம் . இங்கு பத்தாண்டுகளாக சாதி ரீதியான புற்க்கணிப்பு நடைபெற்றுள்ளது என உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் தீபா மோகனன் . இவர் அங்கு பிஹெச்டி படிக்கும் மாணவி . பதினொரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் பல்கலைக்கழக நிர்வாகத்தை பணிய வைத்திருக்கிறார் . தீபா மோகனன் 1600 × 961 பல்கலைக்கழகங்களில் உள்ள ஜாதி பிரச்னைகளை எப்படி தீர்ப்பது ? ஜாதி ரீதியான பிரச்னைகள் அனைவரும் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும் . நான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இதுவரை எட்டு புகார்களை அளித்துள்ளேன் . விசாரணையை தாமதம் செய்ய விசாரணைக் குழுக்களை அமைப்பார்கள் . அப்புறம் அது அப்படியே நின்றுவிடும் . இதில் சில புகார்களின் தாமதத்திற்கு நீதிமன்றமும் காரணமாக உள்ளது . பத்தாண்டுகளாக பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியான பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறேன் . அதனை நீர்த்துப்போகும் விஷயங்களை நிர்வாகத்தினர் செய்து கொண்டே இருந்தனர் . தீபா மோகனன் 1280 × 720 பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றிய புகார்களை எப்...